பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அணிந்துரை

பல்வேறு சமயங்களின் கருத்துச் செல்வங்களை மட்டுமல்லாது சமய அடிப்படையில் தமிழ் வளம்பெற்ற வரலாற்றையும் உரியவர்களைக் கொண்டு ஆய்ந்து தெளிய வழிவகுத்த கலைமாமணி மணவை முஸ்தபா அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் இத்தகைய ஆக்க முயற்சிகள் மொழி வழிசமய ஒருமைப்பாட்டையும் தேசிய ஒருமைப்பாட்டையும் வளர்ப்பதோடு அழுத்தமாக நிலை பெறவும் வழிகோலும் என்பது திண்ணம்.

பல சமய இலக்கியங்களில் காணப்பெறும் சிறப்புக்களை அறிந்து கொள்ளும் நல்வாய்ப்பினைப் பெற இத் தொகுப்பு அரிய வாய்ப்பாக அமைகிறது. இக்கருத்தரங்கில் கலந்து கொண்டவன் என்ற முறையில் ஓரிரு கருத்துக்களை கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன். நம்முடைய சமய இலக்கியங்களை உலகப் பெரு மொழிகளில் படைத்து வழங்கும் பெரும் பொறுப்பு நமக்கு இருப்பதை உணர்ந்து கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம். இத் தகைய அரும்பணியை திரு மணவை முஸ்தபா போன்றவர்கள் திறம்படச்செய்து வருவதை நாம் நன்குஅறிவோம்.

டாக்டர் ஜி யூ போப் அவர்கள் திருவாசகத்தை ஊன்றிக் கற்று, உள்ளம் உருகப் பெற்றவராய் அந்த நூலை உலக மக்களுக்காக-ஆம் இந்திய நாட்டில் பிற மொழி பேசும் மக்களையும் உளளிட்ட உலக மாந்தருகாக-அவர் அந்நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டார். அவர் காட்டிய முறையைப் பின்பற்றி நம்முடைய சமய இலக்கியங்கள் பலவும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். பணி திறம்பட நடைபெற வேண்டும் என்றால் காழ்ப்புணர்ச்சிகள், முழுமை