பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 7

யாக ஒதுக்கப்பட்டு நட்புணர்ச்சியோடு பிற சமயத்தவர்களை அரவணைக்கும் பண்பும் அவர்களுடைய உள்ளுணர்வுகளுக்குள் புகுந்து அவர்கள் கருத்துக்களைப் புரிந்து கொள்கிற நல்நோக்கும் நம்மிடையே பெருக வேண்டும். இதனை ஆங்கிலத்தில் Empathy என்று கூறுவார்கள். பிறசமய இலக்கியத்தைப் படைத்தவர் எவராக இருந்தாலும்-அவருடைய சமயம் எதுவாக இருந்தாலும்-அவருடைய மன உணர்வுகளுக்குள் புகுந்து அவருடைய மனநிலையைப் பெற்றவாறு அவ்விலக்கியத்தைப் புரிந்து கொள்ள முற்படும்போது மட்டுமே அவ்விலக்கியத்தை முழுமையாகச் சுவைத்த உணர்வும் அதன் பயனைப் பெற்றுக் கொண்ட நிறைவும் நமக்குக் கிடைக்க முடியும்.

கவிஞர் மு. மேத்தா அவர்கள் உரையில் இலக்கிய நோக்கினபடி 'தமிழ் இலக்கியம்' என்ற ஒரே வகைப்படுத்தல் தான் இருக்க முடியும்; சமய இலக்கியங்கள் என்று அவற்றை பகுப்பது சரியன்று என்று குறிப்பிட்டார்கள். சிலம்பொலி சு. செல்லப்பனார் அவர்களும எச்சமயத்தவரால் படைக்கப் பெற்றாலும் தமிழில் உருவாகும் இலக்கியம் தமிழ் இலக்கியமே என்று குறிப்பிட்டுள்ளார்கள். அவர்கள் கூறியதைத் தழுவி, தமிழில் படைக்கப்பட்ட சைவ-வைணவ-சமண-பெளத்த-இஸ்லாமிய இலக்கியம் தமிழ்க் கிறிஸ்தவனாகிய எனக்கும் சொந்தமானவை என்று நான் பெருமையுடன் கூறிக் கொள்வேன். தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் வேற்று நாடுகளுக்கும் சென்று அங்குள்ள நண்பர்களோடு உரையாடும்போது பலரிடத்தில் நான் தமிழன் என்கிற முறையில் இரட்சண்ய யாத்திரிகம் தேம்பாவணி மட்டுமல்ல, பெரிய புராணம், திரு வாய்மொழி, சீறாப்புராணம் ஆகியவையும் என்னுடைய தமிழர்களாகிய எங்களுடைய இலக்கியங்கள் என்று நான் கூறத் தவறுவதில்லை.

தங்களுக்குத் தரப்பட்ட தலைப்புகளை ஒட்டிச் சமண பெளதத இலக்கியங்களிலிருந்தும் இஸ்லாமிய இலக்கியங்களிலிருந்தும் எடுத்துக்காட்டுகள் பலவற்றைக் கட்டுரையாளர்கள் வழங்கியதோடு பேரளவுக்கு அறிமுகமாகாத