பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

வோர் வரை தன் பார்வையைச் செம்மையாகச் செலுத்தியுள்ளார். இஸ்லாமிய நெறியினைப் போற்றும் பேரிலக்கியத்தையும் சிற்றிலக்கியத்தையும எடுத்துரைத்து அவற்றில மிளிரும் கவிதை மணிகளைத் தன் கட்டுரையிலே நிரல்படுத்தி ஒளிஉமிழச் செய்கிறார். அவர் கொண்ட முழுமையான பார்வை முதல்முறையாக இஸ்லாமிய நூல்களைக் கற்போருக்கும் முழுமையான நிறைவைத்தரும் என்பதில் ஐயமில்லை.

அன்பரசர் ஏசு பிரான் அடிபோற்றி வாழும் இயல்பினர் பேராசிரியர் வள்ளுவன் கிளாரன்சு மோத்தா அவர்கள். புத்தபிரான் பெருந்துறவையும் போதிமர நிழல் ஞானத்தையும் அள்ளித்தரும் இலக்கியங்களின் அருமையை ஆய்கிறார். சமயப் போட்டியின் காரணமாகப் பல புத்தமத நூல்கள் அழிவுற்றன எனக் குறிப்பிட்டு, அழியாமல் நிற்பவற்றின் சிறப்பினை எடுத்துரைக்கினறார் புத்தர்கள் செய்த இலக்கணத்தொண்டினை மறவாது போற்றுகின்றார். மணிமேகலைக் காவியம் பற்றி அரியதொரு திறனாய்வு செய்துள்ளதைப் பாராட்டாமல் இருக்கமுடியாத நகைச்சுவை யுணர்வாலே நயமான கருத்துகளை வெளியிடும் பாங்கினை அழகுற வெளிக்காட்டியுள்ளார்.

கவிஞர் முகம்மது மேத்தா (மு. மேத்தா) அவர்கள் எடுத்ததுமே எந்தமத இலக்கியமாக இருத்தாலும் அது தமிழ் இலக்கியமே, அதைப் பிரித்துப் பார்க்கும் பேதைமை வளரக் கூடாதெனக் கடிந்து கூறி, சமண இலக்கியச் சிறப்பையெல்லாம் வெளிக்கொணர்கிறார். சமணர்கள் தங்கள் கருத்தை நிலைநாட்டபட்ட தொல்லைகட்காகக் கவிஞர் நெஞ்சத்தில் கண்ணீர் மல்கக் காண்கின்றோம. 'ஓட்டுக்கேட்க வந்த சமணர்கள், ஓட்டுப்போடுவோ ராயினர்', 'கடிதம் கொடுக்கும் தபால்காரரே காதல்கடிதம் எழுதத் தொடங்கினார்', 'அகம்புறம் பாடிய தமிழ் நிலத்தே இகம்பரம பேச வைத்தனர்', 'அற நூல்களையும் அறிவியல் நூல்களையும் எழுதுகிற போக்கை உருவாக்கினர்' எனும் கருத்துக்கள் போற்றத்தக்கன. சிந்தா-