பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14


அதிலும் அவ்வச் சமயத்தைச் சார்ந்தோர் அவரவர் சமய இலக்கிய வளர்ச்சியைப் பற்றிப் பேசாது மாற்றுச் சமயத்தவர் இலக்கிய வளர்ச்சியை ஆராய்வது பல்லாற்றானும் பாராட்டத்தக்கதாகும். இத்தகைய போக்கும் செயலுமே உண்மையான ஒருமைப்பாட்டை உருவாக்க இயலும். இன்றைய சமுதாயம் இதையே எதிர்பார்க்கிறது.

இது, இலக்கிய முயற்சியில் ஒரு புதுமையான, பலரும் பின்பற்றத்தக்க முன்னோடிச் செயல் என்பதில் கிஞ்சிற்றும் ஐயம் இல்லை.

இத்தகைய அரிய முயற்சியில் ஈடுபட்ட என் நண்பர் கலைமாமணி மணவை முஸ்தபா அவர்களைப் பாராட்டுகிறேன். அவரது முயற்சிக்குத் துணையாக நின்று ஆய்வுக் கட்டுரைகளை வழங்கிய ஆய்வாளர்கள் போற்றுதற்குரியோர் ஆவர்.

ஸ்ரீபால்
ஐ. ஜி.
தமிழ்நாடு காவல் துறை