பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

யனையும் கடைதேற்றச் செய்யும் தொண்டு, இந்து சமயத்தின் சிறப்பு சகிப்புத்தன்மை, எவையும் எல்லாவற்றையும் ஏற்றல்.

இத்தகைய கொள்கை கோட்பாடுகளின் அடிப்படையில் பல்வேறு கால கட்டங்களில் உருவாக்கப்பட்ட இலக்கியங்களை ஆய்வதன் மூலம அவற்றிறகிடையேயான ஒருங்கியல்பை அறிந்துணர்ந்து வெளிக் கொணரும் முயற்சி எலலா வகையிலும் பாராட்டப்படத் தக்கதாகும்.

இத்தகைய பரந்த ஒருமையுணர்ச்சியை உருவாக்கும் அரிய முயற்சியில் ஈடுபட்டு, ஒருமைப்பாட்டிற்கு வழிகோலும் வகையில் கருத்தரங்கு, தொகுப்பு நூல் எனச் செயல்படும் திரு. மணவை முஸ்தபாவின் தொண்டு காலத்தால் நினைவு கூறும் நல முயற்சியாகும்,

(கருத்தரங்கில் ஆற்றிய உரைச் சுருக்கம்)

டாக்டர் ந. சஞ்சீவி

சென்னைப் பல்கலைக் கழகத்

தமிழ் இலக்கியத் துறைத் தலைவர்