பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சமண இலக்கியம்

கவிஞர் மு. மேத்தா, எம். ஏ.

தமிழ் இலக்கியங்களைச் சமணர் இலக்கியங்கள் என்றோ பெளத்த இலக்கியங்கள் என்றோ பார்த்ததில்லை சொல்லப்போனால் அவ்வாறு பிரித்துப் பார்ப்பதற்குரிய வசதிகள் உள்ளதாக இருக்கும் என்றால் அவை இலக்கியங்கள் இல்லை. அடையாளமே தெரியாதபடி, இந்த இலக்கியம் தனக்குள்ளே, அதன் மதத்தினுடைய கொள்கைளையும் கோட்பாடுகளையும், இரண்டறக் கலந்து ஓட்டமாகக் கொண்டிருப்பதுதான் ஒரு நல்ல இலக்கியத்தினுடைய இயல்பு என்று நான் கருதுகிறேன். ஆனால் இங்கே குறிப்பிட்ட மதம், ஒரு சமயம், தமிழுக்கு எந்த வகையில் எல்லாம் பணி புரிந்தது என்பதைக் கணக்கெடுத்துப் பார்க்க வேண்டிய ஆராய்ச்சி நெறியிலே இந்தக் கருத்தரங்கத்தை அமைத்திருக்கிறார்கள்.

இன்றைக்கு நான் சமண இலக்கியங்களைப் பற்றிப் படித்துப் பார்த்தபோது, சமணர் இலக்கியங்களுக்காக நான் மகிழ்ச்சி அடைந்ததைவிட இந்தச் சமணர்கள் எப்படி எல்லாம் போராடினார்கள் என்பதற்காக மிகவும் வருத்தப்பட்டேன். ஒரு குறிப்பிட்ட மதமானது எப்படி, இந்த நாட்டில் ஒடுக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றி டாக்டர் க.ப. அறவாணன் போன்றவர்களும் வேறு பல பெருமக்களும் எழுதியிருக்கின்ற செய்திகள் என் நெஞ்சை உலுக்கின. கொள்கைகளின் தூதர்களுக்கு உலகத்திலே நடந்த பெரிய கொடுமைகளையெல்லாம் கேள்விப்பட்டுப் பதறிப்போன நம் நெஞ்சில், பாகிஸ்தானிலே நடந்த படுகொலைகளை எல்லாம் கற்பழிப்புக்களை