பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20


இவ்வளவு பெரிய மனிதர்கள் இழிப்பும் பழிப்புமான உணர்வுகளைப் பரப்பி, கடுந்தாக்குதல்கள் தொடுத்தார்கள் என்பது வரலாறு தரும் உண்மை. சமணர்கள் இத்தகைய தாக்குதல்களுக்கு மத்தியிலே செய்த பணியை, நாம் போற்ற வேண்டியதாக இருக்கின்றது. நீதி இலக்கிய நூல்களாகவும், காப்பியங்களாகவும், இலக்கண நன்கொடைகளாகவும், தமிழுக்குக் கொடுத்திருக்கின்ற கொடைகளை பற்றி நினைக்கிறபோதுதான் அவற்றின் சிறப்புகளைச் சீராட்ட முடிகிறது இன்றைக்குச் சீறாப்புராணம் என்று சொன்னால் இஸ்லாமிய இலக்கியம் என்று தெளிவாகத் தெரிகிறது. 'ரட்சண்ய யாத்திரீகம்' என்று சொன்னால், அது கிறித்தவ இலக்கியம் என்று தெளிவாகத் தெரிகிறது. தேவாரம் எனறு சொன்னால், சைவ இலக்கியம் என்று தெளிவாகத் தெரிகிறது மணிமேகலை என்று சொன்னால் அது பெளத்த இலக்கியம் என்று தெளிவாகத் தெரிகிறது. ஆனால் யாப்பிலக்கணத்தை ஒரு சமண இலக்கியம் என்று சரியாகக் கணக்கிட்டுச் சொல்ல முடியவில்லை. அதே மாதிரி சீவக சிந்தாமணியை, சமண இலக்கியம் என்று தனியாக மதிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை. சிலப்பதிகாரத்தைச் சமண இலக்கியம் என்று சொல்லுகிறார்கள். சமண இலக்கியம் அல்ல என்றும் சொல்லுகிறார்கள். திருக்குறள் சமண இலக்கியம் என்று சொல்லுகிறார்கள். அல்ல என்றும் அறிவிக்கிறார்கள் அறிஞர்களுக்குள்ளேயே ஒரு விதமான விவாதம் நடைபெற்றுக் கொள்ள கூடிய வகையில் அமைந்திருப்பதே சமண இலக்கியங்களுடைய வெற்றி என்று நான் கருதுகிறேன்.

சமணர்கள் தமிழுக்குத் தொண்டு செய்வதற்குரிய காரணம் என்ன? அவர்கள் ஓட்டுக் கேட்கத்தான் வந்தார்கள் ஆனால் ஓட்டுக் கேட்க வந்தவர்களே, ஓட்டுப் போடுபவர்களாக மாறிப்போகின்ற ஒரு நிலையை நாம் பார்க்கிறோம். தத்துவத்தை, தத்துவக் கடிதங்களை