பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25

என்ற கேள்வி வருமேயானால், பெரும்பாலும் அந்த நூல் சமண நூலாக இருக்கக் கூடும் என்று கருதுவதற்கு இடமிருக்கிறது. அது மாதிரி அவர்கள் நம்முடைய பெருமைகளைப் பேசாமல் போகிறபோக்கை நாம் பார்க்கலாம். அதுமட்டுமல்ல வெளிப்படையாகப் பேசுகிற போக்கு அவர்களுடைய நூல்களிலே காணப்படுகிறது. நீலகேசி ஆசிரியர் சொல்லுகிறார். தான் கனவிலே கண்ட ஒரு நிகழ்ச்சியைத்தான், காவியமாக எழுதுகிறேன் என்று வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார். சில பேர் அப்படிச் சொல்ல மாட்டார்கள். நான் நேரிலே பார்த்ததை எழுதுகிறேன் என்பார்கள். இல்லை, இல்லை என்னுடைய வாழ்க்கையிலேயே நடந்தது என்பார்கள். பல பேர் எழுதுகிற சுயசரிதங்களைக்கூட நாம் சோதனை செய்ய வேண்டியிருக்கும். அவர்களுக்குப் பக்கத்து வீடுகளிலே பக்கத்துத் தெருவிலே இருந்தவர்களைக் கேட்டுப் பார்த்தால் அவை சுயசரிதங்கள் அல்ல. அவைகள் அருமையான நாவல்கள் என்பது புலனாகிவிடும். சரிதங்களே கட்டுக்கதையாகி விடுகிற பொழுது, தாம் செய்யப் போகிற காவியம் கனவிலே கண்ட ஒரு நிகழ்ச்சி என்று எழுதும் இலக்கிய நேர்மை எனக்குப் பாராட்டுவதற்குரிய ஒன்றாகத் தோன்றுகிறது.

சமண இலக்கியத்தினுடைய அடிப்படை மையக் கருத்தானது உலகத்திலே இருக்கிற உயிர்களை எலலாம் உறவாகப் பாவிப்பது! உலகத்திலே இருக்கக்கூடிய உயிர்களை எல்லாம் உறவாகப் பாவிப்பது, இஸ்லாம் மதத்திலே சொல்லுவார்கள் அண்டை வீட்டுக்காரன் பக்கத்திலே பசித்து இருக்கும்பொழுது தாம் மட்டும் உண்ணுகிறவன் ஒரு உண்மையான முஸ்லிமாக இருக்கமாட்டான் என்று அண்டை வீட்டுக்காரன் பசித்திருக்கிற பொழுதுதான் தான் மட்டிலும் உண்ண வேண்டும் என்று இப்போது நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால், அவர்கள் சாப்பிடும்போது நானும் சாப்பிட்டால்,