பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30


"நீ மறுபடியும் சத்தமாகச் சொன்னால், மூன்று நாள் சாப்பாடு போட மாட்டாள், ஜாக்கிரதை" என்று ஆண் கிளி சொல்கிறது. பெண் கிளிக்கு இருக்கிற தைரியம்கூட ஆண் கிளிக்கு இல்லை. கிளிகளின் கதையில் அப்படித்தான, பெண் கிளியைப் பார்த்து ஆண் கிளி சொல்லுகிறது. ‘பொத்து உம் வாயை’ என்று. அப்பொழுது பெண் கிளி மறுத்துப்பேசுகிறது. நீங்கள் பாரதிதாசன் படைப்புகளில் எல்லாம் பாருங்கள். ஆண்கள் தயங்கி நிற்பார்கள். பெண்கள் முன்னேறுவார்கள் அப்படித்தான் அவருடைய காவியங்களில் எல்லாம் எழுதியிருக்கிறார்.

'உன் மகனின் நிலை என்ன? என்றாள் அன்னம்.' ஒரு பெண் கேட்கிறாள்: 'உன் மகன் என்ன ஆவான்? இப்படிச் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறானே?"அப்பொழுது அந்தக் கிழவி சொல்லுவாள் 'ஊர்மீட்கச் சாகட்டும்' என்று. 'திருடுவதை விட வேண்டும் அல்லது என்னைத் தீண்டுவதை விடவேண்டும்' என்று சொல்லி கள்வனுடைய மனைவி, கள்வனிடத்திலே சொல்லுவாள். "திருடுவதை விடு அல்லது தீண்டுவதை விடு". 'முதலிலே என்னைத் திருடினாய் சந்தோஷம். இப்போ என்னத்தையோ திருடிக் கொண்டு இருக்கிறாயே...' என்று எடுத்துச் சொல்லுகின்ற போக்கை நாம் பார்க்கிறோம்.

பெண் கிளி இங்கே வீரமாகப் பேசுகிறது. "என்னை வளர்த்த தாயேயானாலும் கூட நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். இவள் பெண்ணினம் கெடப் பிறந்தவள் பெண்களுடைய சிறப்புகளை, கெடுப்பதற்குப் பிறந்திருக்கிறாள். இவள் வளர்த்தாள் என்று சொல்வது கூட எனக்குப்பழி. இவள் வளர்த்த நான் இனி வாழ வேண்டிய அவசியமில்லை. இவள் ஊட்டி வளர்த்த அந்த உயிர் வேண்டிய தில்லை." என்று சொல்லுகிறபொழுது ஒரு அழகான கற்பனையைச் சொல்லுகிறார். பழத்தை கட்டி தொங்கவிட்ட-