பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31

ருப்பார்கள் கூண்டுக்குள்ளே. அந்தப் பழத்தை தின்று தீர்த்ததற்குப் பிறகு அந்த பழத்தைக் கட்டிய கல் மட்டும் அப்படியே வட்டமாகக் குட்டி மணிக்குப் போட்ட தூக்கு கயிறு மாதிரி தொங்கிக் கொண்டிருக்கும். அந்தக்கிளி 'இவள் வளர்த்தாள் என்பது எனக்குப் பழி!' என்று சொல்லி விட்டு அந்தக் கயிற்றிலே தலையை தூக்கிட்டு கொள்ளப் போகிறதாம் அற்புதமான கற்பனைக் காட்டுகிறார். இந்தப் பேச்சைக் கேட்டுவிட்டு இங்கே அந்த ஊடல் முடிந்தது. மறுபடியும் கூடல் தொடங்குகிறது என்று இந்த ஒரு துக்ககரமான காட்சியின் தொடக்கத்தைக் காட்டி, எல்லாவற்றையும் மகிழ்ச்சியாக மாற்றுகிற சீவக சிந்தாமணியுடைய இயல்பை என்னால் மறக்கவே முடியவில்லை. அந்தக் கற்பனையின் கவிதையின் இனிமைகளை நான் மிக நேசித்தேன்.

இன்னொரு இடத்திலே ரொம்பவும் அழகாகச் சொல்லுவார். எப்போதும் சரஸ்வதியும், லட்சுமியும் ஒன்றாக உட்கார மாட்டார்கள், நம் நாட்டு தலைவர்கள் மாதிரி. ஒன்று உட்கார்ந்தால், புகைப்படம் எடுக்கிறபோதுதான், புகைப்படம் எடுத்ததும் எழுந்து போய் விடுவார்கள். நம் நாட்டு தலைவர்கள் மாதிரி இந்த சரஸ்வதியிருக்கிற இடத்தில் லட்சுமி உட்காருவதில்லை. லட்சுமி உட்காருகிற இடத்தில் சரஸ்வதி உட்காருவதில்லை. இது திருத்தக்கதேவருக்கு தெரிகிறது. நாடு என்பது எப்படி இருக்க வேண்டும் என்றால் சரஸ்வதியும் லட்சுமியும் ஒன்றாக அமர்ந்திருக்கிற மாதிரி இருக்கவேண்டும் என்று அவர் சொல்லுகிறார். "நா வீற்றிருந்த புலமா மகளொடு" என்று சொல்லி அந்தப் பாடலைக் குறிப்பிடுகிறார். நாவிலே வீற்றிருக்கக்கூடிய சரஸ்வதியோடு திருமகளும் சேர்ந்து வீற்றிருக்கவேண்டும் என்று சொல்லுகிறார். ரொம்ப அற்புதமான கற்பனை!

கம்பரைப்பற்றி எனக்குப் பெரிய கர்வமே உண்டு. அவர் என்னுடைய மொழியிலே எழுதினார் என்கிற கர்வம் அந்த