பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

கம்பனுக்கே இவர் வரப்பிரசாதம் மாதிரி வழங்கியிருக்கிறார். ஓரிடத்திலே கம்பன் சொன்னான். 'வானம் கை விளக்கு எடுத்துக் கொண்டு வந்தது' என்று புதுக் கவிதை மாதிரி இருக்கிறது. அந்த நிலாவைச் சொல்லுகிறார். வானம் கைவிளக்கை எடுத்துக் கொண்டு வத்தது. அவ்வாறு யோசித்திருக்கிறானே என்று நான் மகிழ்ந்தேன் அப்புறம் இப்படித் திருப்பிப் பார்த்தால், திருத்தக்கத் தேவரும் சொல்லியிருக்கிறார். “கைவிளக்கு ஏந்தியாங்கு மதியம தோன்றும்” என்று திருத்தக்கத்தேவர் சொல்லியிருக்கிறார்.

சமணப் பெண்களைக் கற்பழிக்க வேண்டும் என்று நாயன்மார்களில் ஒருவர் பாடியிருக்கிறார். சாக்கியர்களை அப்படிச் செய்ய வேண்டும். சமணர்களை இப்படிச் செய்ய வேண்டும் என்று பாடியிருக்கிறார். யாரைப் பார்த்து பாடியிருக்கிறார்: திருத்தக்கத்தேவர் ஓர் இடத்திலே அழகாகச் சொல்லுகிறார். 'இந்த உழவர்கள் எல்லாம் போகிறார்களாம் இவர்கள் வேலை என்ன என்று சொன்னால், களையினைப் பிடுங்கி எறிவது. நெல் வயல்களிலே ரோஜா மலர் பூத்தால் கூட அது களையாக மாறி விடுகிறது. அதைப் பிடுங்கித்தான் போடவேண்டும். களை எடுப்பதற்கு போகிறான் உழவன். அந்த நிலத்திலே குவளை மலர் இருக்கிறது. இந்தக் குவளை மலரைப்போய் பறிக்கப் போகிறான். 'அடாடா இதைத் தொடக் கூடாது' என்று நின்று விடுகிறான். காரணம் அது பெண்ணின் கண் போல் இருப்பதால், கண்ணு ஞாபகம் வந்தவுடனே. அந்தக் கணணை, தாமரைம் பூவைப் பறிக்கப்போகிறான் அதைப்பார்க்கிறபொழுது சட்டென்று என்ன நினைவுக்கு வருகிறது. அந்தப் பெண்ணினுடைய முகம் முன்னே வந்துவிடுகிறது. ரொம்ப அருமையாக அந்த பாடலை அவர் சொல்லுவதைப் பார்க்கலாம். தாமரைப்பூவைச் சொல்லுகிறபொழுது, தாமரைப்பூவைப் பார்க்கிறபொழுது, தன்னுடைய காதலியினுடைய முகம் நினைவிற்கு வர, அந்த முகம் என்று சொல்லி அதை அவர்கள் பறிக்கவில்லை