பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

இன்னொரு சந்தையிலே வாங்கிக் கொண்டு வந்தார்கள். இரண்டையும் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறீர்கள் சரி அண்ணன் தம்பி என்று சொல்லலாமா? சொல்ல முடியாது. ஏனென்றால் ஒரே வயிற்றிலிருந்து வந்ததல்ல. இந்த இரண்டு எருதும் ஒரே வயிற்றிலிருந்து பிறக்கவிலலை. அப்படியும் சொல்ல முடியாது சரி ஆசிரியர் மாணவர் என்றாவது சொல்லலாமில்லையா! அது முன்னே பின்னே தொடர்பே இல்லாத எருதுகளாயிற்றே எப்படிச் சொல்வது? மாமனும், மாமியும் மாமனும மருமகனும், என்று சொல்லிச் செல்லலாம் சைவ இலக்கியத்திலே நான் படித்தேன். 'அப்பனும் நீ, அம்மையும் நீ ஒப்பறிய மாமனும் மாமியும் நீ' என்று இறைவனைப் பாடுகிறார் இப்போது மாமன் அன்பு உயர்ந்த அன்பு என்று அங்கீகரிக்கப்பட்டி ருக்கிறது. அந்தச் செய்தியை இவர் சொல்லுகிறார். 'மாமனும் மருமகனும் போல' என்று சொல்லி அவர் குறிப்பிடுகின்றார். அது மட்டுமல்ல, அதற்கு அன்பு உடமையிலே இங்கே ஒரு பெரிய புரட்சியை ஏற்படுத்து கிறார். அதற்கு அடுத்து வரும் வரியைப் பாருங்கள் 'காமனும் சாமனும் கலந்த காட்சியை’ என்று சொல்கின்றார். காலன் நமக்கு தெரியும். அந்தக் கலையிலே அவன் பெரிய ஆள் அந்தக் காமனுக்கு அடுத்தாற்போல அதே மாதிரி ஒரே அச்சில் வார்தத மாதிரி இருக்கிறது. அந்த அளவுக்குச் சமமாக இருக்கிறது எனபதினாலே, அவருடைய தம்பியைச் சொல்லி காமனும் சாமனும் போல என்று சொல்லி குறிப்பிடுகின்றார்.

அற்புதமான இந்தக் கற்பனைகளை எல்லாம் பார்க்கிற பொழுது, சீவக சிந்தாமணி தமிழுக்குக் கிடைத்த பெரிய நன்கொடை என்று நான் கருதுகிறேன். தமிழனுடைய சிறந்த சிறப்பாகிய விருத்தப்பாவை, தமிழுக்குக் கொடுத்த அற்புமான இலக்கியம் சீவக சிந்தாமணி இந்த அருமையான சமண இலக்கியங்களுடைய சிறப்பை சின்ன பேதங்களாலே நாம் மறந்துவிடலாகாது என்று கருதுகிறேன்