பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37


நாளடைவில் சோழ நாட்டில் கிரந்த எழுத்திலிருந்து ஒருவகை தமிழ் எழுத்து உண்டாக்கப்பட்டு இப்போதுள்ள தமிழ் எழுத்து வழங்கப் பெற்றது. பிறகு சோழர்கள் பாண்டிய நாட்டை வென்ற பிறகு பத்தாவது நூற்றாண்டிலே அங்கும் கிரந்த தமிழ் எழுத்துக்களைப் புகுத்தினர். ஆகவே எழுத்து உருமலர்ச்சிக்கு, பெளத்தர்கள் தம் சமயத்தைப் பரப்பிய பிராமிய எழுத்துக்கள் எவ்வாறு உதவின என்பதை நாம் பார்க்கும்போது, பெளத்தவர்கள் தமிழ் எழுத்து வளர்ச்சிக்குச் செய்த பெரிய உதவியைக் காண முடிகின்றது.

இன்னும் அவர்கள் பயன்படுத்திய பாலிச்சொற்களும் தமிழ்ச் சொற்களோடு இணைந்து விட்டன ஒரு சிலசொற்களை மட்டும் எடுத்துக்காட்டாக் கூற விரும்புகின்றேன். அவர்கள் எழுப்பிய தமது ஆலயங்களை 'விஹார்' என்று அழைத்தார்கள். அவற்றை 'விகாரம்' அல்லது 'விகாரை' என்று கூறுகிறோம். கட்டிய கோபுரங்களைத் தூபி, ஸ்தூபி என்று அழைத்தார்கள். அவற்றையும் ஏற்றுக் கொண்டிருக்கின்றோம் அவர்களுடைய துறவிகளை பிக்குகள், பிட்சுகள் என்றும் பெண் துறவிகளை பிட்சுனிகள் என்றும் நாம் அழைக்கின்றோம். இன்னும் புத்தர். இல்லறவாசிகளுக்கு ஐந்து சீலங்களையும், உயர்ந்த இல்லற வாசிகளுக்கென்று எட்டு சீலங்களையும், துறவியருக்கென்று பத்து சீலங்களையும் வழங்கினார் என்பது வரலாற்றில் நாம் அறிகின்ற உண்மை. ஆகவே சீலம் என்ற சொல்லை நாம் ஏற்றுக் கொண்டிருக்கின்றோம். பள்ளிக் கூடம் என்பது கூட இந்த பெளத்தத் துறவியர் மடத்திலிருந்து வந்த சொல் என்று கூறப்படுகின்றது. பள்ளி என்பது, பெளத்த சமயத் துறவிகள் மடம். அதிலே முன்னால் இருக்கின்ற கூடத்தில் மாணவரைக் கூட்டி வைத்து அவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது வழக்கம். ஆகவே பள்ளியின் கூடத்தில் அவர்கள் அமர்ந்ததனாலே அதைப்பள்ளிக்கூடம் என்றார்கள் தமிழ்ச் சொற்களுக்கும்