பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41

பாத்திரம் ஏந்தி வருகின்றார். பிரம்பை எடுத்து வருகின்றார். உண்ணா நோன்போடு மண்ணாமேனியர் குளிக்காத அழுக்கு உடல் உடையவர். ஆகவே பெளத்தர் எழுதும்போது ஓரளவு நக்கலோடு எழுதுகின்றார். அவரைப் பார்த்ததும் களிமகன் குளியாமல் வரும் ஒருவரைக் கண்டவுடனே கொஞ்சம் வேடிக்கைப் பண்ணுகிறார். 'வந்தீர் அடிகள் நும மலரடிகள் தொழுதேன்’ என்கிறார். குடித்தவர் எப்பொழுதுமே தமது உணர்ச்சிகளை மிகுதிப்படுத்திப் பேசுவது வழக்கம். ஆகவே வணக்கத்தை அதிகமாகக் கூறி காலில் விழுந்து வணங்குவது போல் காட்டுகிறார்.

“உண்ணாநோன்போடு உயவல் யானையின்
மண்ணா மேனியன் வருவோன் தன்னை
வந்தீரடிகள் நும் மலரடி தொழுதேன்
எந்தம் அடிகள் எம்முரை கேண்மோ
அழுக்குடை யாக்கையில் புகுந்த நும்முயிர்
பழுக்கறைப் பட்டோர் போன்றுளம் வருந்தா
இம்மையும் மறுமையும் இறுதியில் இன்பமும்
தன்வயின தருஉம், என் தலைமகன் உரைத்தது
கொலையும் உண்டோ, கொழுமடல் தெங்கின்
விளைபூந் தேறலின்? மெய்த்தவத் தீரே
உண்டு தெளிந்தில் யோகத்து உறுபயன்
கண்டால், எம்மையும் கையுதிர்க் கொண்ம் என
உண்ணா நோன்பி தன்னொடும் சூளுற்று
உண்மென இரக்குமோர் களிமகன்.”

களிமகன் கூறுகிறான், புழுக்கமான அறையில் அடைபட்டுக்கிடப் போரைப் போன்று, அழுக்கடைந்த உமது உடலில் உயிரானது சிறைப்பட்டுத் தவிக்கிறதே. உண்மை இன்பம் தரும் கள்ளைக் கொஞ்சம் குடித்துப் பாரும். நீர் பெற்ற யோக இன்பத்தை எல்லாம் விடச் சிறந்த இன்பம் இதில் கிடைக்கும் என்று கூறி, யோகிக்கு அந்த சமண