பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44


"பூம்பொதி சிதையக் கிழித்துப் பெடை கொண்டு
ஓங்கிருந் தெங்கின் உயர்மட வேற"

உயரே போய்விட்டு இறுமாப்போடு கொக்கரிக்கின்றது. நீயா என பெடையைப் பிடித்துக் கொண்டாய்?” நேரம் கடந்து விட்டது. ஆகவே மணிமேகலையும் சுதமதியும் செல்ல வேண்டும் என்பதைக் குறிக்கின்றார் கவிஞர். ஒருவருக்குரியதை மற்றவர்கள் எடுத்துக் கொள்கின்றார்கள். ஆகவே மணிமேகலைக்கு ஆபத்து வந்துவிடக் கூடாதே என்ற கருத்தை மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகின்றார்.

இன்னொரு நிகழ்ச்சி, இங்கே சுதமதி நேரமாகிறது என்று சொல்லக் கூடிய ஓர் வாய்ப்பு ஏற்படுகின்றது.

“அன்றில் பேடை அரிக்குர லழைஇச்
சென்றுவீழ பொழுது சேவற் கிசைப்ப”

மெல்லிய ஓசை உடைய சொற்களாலே சொல்லுகின்றார். அன்பில் பேடையானது மெல்லிய குரல் எழுப்பி, நேரமாகிறது என்கிறது ‘சென்று வீழ்’-இங்கேயும் விழ்கின்றது எனும் கருத்தைத்தான் சொல்லுகின்றார். நேரமாகிறது என்பதைக் குறிப்பிடுவதற்கு.

அடுத்தது, இன்னொரு நல்ல காட்சி. மகள் வரவில்லையே என்று மாதவி ஏங்கிக் கொண்டிருக்கிறாள், பசுக்கள் எல்லாம் போகத் தொடங்குகின்றன. கன்றுகள் மேய்ந்து கொண்டு போகின்றன. போகும்போது கன்றுகள் நெருங்கிய உடனே பால் கரந்து கொட்டுகின்றது. வீட்டை நோக்கிப் பசுக்கள் வேகமாக ஓடுகினறன. போகும்போது துகள், தூசி பறக்கின்றது. பறக்கின்ற தூசியைப் பசுக்கள் பால் பொழிந்து அப்படியே அமுக்கி விடுகின்றன. கன்றின் ஏக்கத்தை தாயின் ஏக்கமாகவும் பால் சொரிவதை அன்பு சொரிவதாகவும் தூசி எழுவதைப் பசுக்கள், கன்றுகள் ஓடும் வேகத்தைக் குறிப்பிடுவதாகவும் அழகாகச் சொல்லுகின்றார்.