பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கிறிஸ்தவ இலக்கியம்
டாக்டர் க. ப. அறவாணன்


'கிறிஸ்தவர் தம் எழுத்தாலும், உழைப்பாலும், தமிழ் பயனுற்றது தமிழர்களும் பயன் பெற்றனர். மொழிக்கும இனத்திற்கும் பணியாற்றிய கிறிஸ்தவர்களை, ஐரோப்பிய கிறிஸ்தவப் பணி என்றும், தமிழ்நாட்டுக் கிறிஸ்தவர் பணி என்றும் பாகுபடுத்திக் கொள்ளலாம். இந்த இரண்டு பாகுபாடுகளும் ஐரோப்பிய கிறிஸ்தவர் தமிழுக்கும் தமிழர்களுக்கும் ஆற்றிய பணிகளுள் சில புதிய பார்வைகளை எடுத்துக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

'ஒன்று, வெட்கத்தோடு தமிழர்கள் ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மை கி பி. ஒரு சில நூற்றாண்டு தொடங்கி தமிழர்களின் ஆட்சியை முடிவு செய்யும் முதன்மை தமிழ்நாட்டிற்கு வெளியேதான் இருந்தது. இருந்தும் வருகிறது. வட இந்திய வரலாற்றில் எழுச்சிக்கும் தக்க மாற்றத்திற்கும் ஏற்றத்திற்கும் தமிழ் மண்ணின் முடி அரசுகள் ஆட்டுவிக்கப்பட்டன. வட இந்தியாவிலிருந்து தென்குலம் நோக்கி வைதிக, சமண, பெளத்த மதங்களுக்கு ஏற்ப, தமிழ் நாட்டின் அன்றைய ஜாதகம் மாற்றி எழுதப்பட்டு வந்தது. வட இந்தியாவில் ஏற்பட்ட இஸ்லாமிய அரசின் பாதிப்பு. தமிழ்நாட்டு அரசியலில் நிகழ்ந்தது. வடக்கே இருந்து இறக்குமதியாகிக் கொண்டிருந்த நிகழ்ச்சிகளுக்கு ஒரு திருப்பு முனையாக, ஐரோப்பியர் வரவும், கிறிஸ்தவமும் தமிழ்நாட்டின் மேற்கு எல்லையிலிருந்து வரத் தொடங்கின. இன்றும்கூட தமிழர்களுடைய குடுமி, ஐரோப்பியர் கையிலிருந்து வட இந்தியர் கைக்கு மாறியது. அங்வளவுதான்.