பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49



பண்டைய தமிழ்நாட்டுக்கும் இத்தாலியரின் ரோம நாட்டுக்கும் வணிகத் தொடர்புகள் இருந்தன. இதனை பிளினி, தாலமி ஆகியோர் குறிப்புகளும் பெரிபுளஸ் என்ற நூலும் காட்டுகின்றன. ஆனால் அராபியருடன் வணிகத் தொடர்பு மேற்கு இந்திய கடற்கரையுடன் பெருகிய பிறகு ரோமருடன் இருந்து வந்த வாணிபம் குறைந்தது.

செங்கடல், அரபிக்கடல் ஆகிய கடல்வழியும் பாரசீகம் வடமேற்கு இந்தியா, மேற்குக் கடற்கரை என்ற தரைவழியும் அராபியர்களால் கைப்பற்றப்பட்ட சூழ்நிலையில் ஐரோப்பியர் மனம் ஒடுங்கிப் போகாமல் புதிய வழி காணத் துடித்தனர். அதன் விளைவே ஆப்பிரிக்கக் கண்டத்தையே முற்றுமாகச் சுற்றி வரும் பத்தாயிரம் மைல்கள் கொண்ட புதியவழி, இந்த வழியைப் பின்பற்றிக் கள்ளிக் கோட்டையை வந்தடைந்தார் வாஸ்கோடகாமா (கி.பி. 1498 மே, 15) பத்தாயிரம் மைல் தொலைவு அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், மாதக் கணக்கான பயணம் இவற்றைச் சாதித்த வாஸ்கோடகாமாவிற்குக் கள்ளிக் கோட்டையில் பெரிய வரவேற்பு நிகழ்ந்தது. இந்த வரவேற்பை நிகழ்த்தியவர்கள் அந்த ஊர் நம்பூதிரிகள்.

கிட்டத்தட்ட இக்காலத்திற்குச் சற்று முன்னும் பின்னும் ஐரோப்பியருடைய காலணி கவர்வு ஆப்பிரிக்கக கண்டத்திலும் தென் அமெரிக்கக் கண்டத்திலும் வட அமெரிக்கக் கண்டத்திலும் ஆஸ்திரேலிய கண்டத்திலும் நிகழ்ந்தது. ஆசியக் கண்டத்தை டச்சுக்காரரும், ஆங்கிலேயர்களும், பிரெஞ்சுக்காரர்களும், டேனிஷ்காரர்களும் பாகம் போட்டுக் கொண்டபோது ஆசியாவிலுள்ள ஒரு நாடு-ஒரே ஒரு நாடு ஐரோப்பிய மத வரவையும் வணிக உறவையும் வேண்டாம் என வெட்டி எறிந்தது. அயலார் நுழைவு கூடாது என்றே தடைவிதித்தது. அந்த நாடு ஜப்பான். கள்ளிக் கோட்டையை அடைந்த வாஸ்கோடகாமாவிற்கு வரவேற்பு நிகழ்த்திய உள்ளூர் நம்பூதிரி மக்களையும் ஒட்டகத்தின் தலை உள்ளே