பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

(இலக்கியம்) ஆசியாவை சிறந்தவை என்று ஒப்புக் கொள் ளப்பட்ட தமிழரின் எண்ணிக்கையே மிகுதி. ஆக, தமிழர் பார்வையில் (வரவு) என்பதைவிட இழப்பே மிகுதி. திரு வாசகம், திருக்குறள் போன்ற தமிழ் இலக்கியங்கள் ஐரோப்பிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டன,

இந்தியாவிற்குச் சமயத் தொண்டு செய்யச் செல்லும் ஐரோப்பியர், அந்த மண்ணின் மத வாசனையை முன்பே புரிந்து கொண்டிருத்தல் வேண்டும் என்பது மொழி பெயர்ப்புக்கு முதன்மைக் காரணமாக இருந்தது. இதற்கென ஐரோப்பாவில் பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டு அங்கே இந்தியாவுக்கு வரத் தேர்ந்தெடுக்கப் பட்டோருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. நன்னூல் போன்ற தமிழ் இலக்கணங்கள் மொழிபெயர்க்கப்பட்டன. சில மொழி ஆராய்ச்சிகள் நடந்தன. ஐரோப்பியர்களுக்கு இங்குள்ள மொழிகள், பெருந்தடைகளாக இருந்தன. அத்தடையின் வேகத்தைத் தவிர்த்து, ஐரோப்பியருக்கு உதவுவதற்கு இலக்கண மொழிபெயர்ப்புகள் துணையாக இருந்தன.

தமிழைக் கற்றவரை விடத் தமிழைக் கற்காதோரே மிக மிகுதி. தமிழை மதித்தவரை விடத் தமிழை மதிக்காதோரே மிக மிகுதி, தமிழரின் மதிப்பு அறிவிக்கப்பட்டதை விட ஐரோப்பியரின் மொழி மதிப்பே மிகுதியாக அறி விக்கப்பட்டது. ஐரோப்பிய இன மதிப்பே மிகுதியாக அறிவிக்கப்பட்டது. தம் மொழியை, தம் இனத்தைத் தாழ்வாகப் பார்க்கும் போக்கு தமிழரிடையே தோன்றி நிலைபேறு அடைந்துவிட்டது மற்றொரு கொடுமையான விளைவு.

ஐரோப்பியக் கிறித்தவ வரவால், உறவால், தமிழ் நிலம் வளமே ஆகவில்லையா? வளமாகவில்லை என்று உரைப்பது தவறு. ஐரோப்பியம் இந்திய நிலத்தில் வளம் பெறுவதற்காக இரைக்கப்பட்ட ஐரோப்பியத் தொண்டு நீரால் தமிழ்க் கரையில் உரைநடைப் புல் தளிர்விட்டது.