பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57

லாம். வந்து திரும்பிய ஐரோப்பிய அதிகாரிகளின் எண்ணிக்கை குறைந்தது 25,000 ஆவது இருக்கலாம். 2,000 சமய அருளாளர்களின் 23 பேர் ஆற்றிய பணி; 25,000 அதிகாரிகளில் ஐந்து பேர் ஆற்றிய பணி மகத்தானது.

அவர்கள் ஆற்றிய பணிகளுள் மிக மகத்தானதும் பெரிதானதும், மதப்பணியும், ஆட்சிப் பணியுமே. எனவே ஐரோப்பியக் கிருத்தவர் பணி என்பதை விட ஐரோப்பியச் சமய அருளாளர் தமிழ்ப்பணி என்பதே சரியான மதிப்பீடு, பாதிரிமார் பணி என்பதால் சமயச் சாயல் பெற்றே பெரும்பாலானவை செய்யப்பட்டன என்பதில் வியப்பு இருப்பதற்கு இல்லை.

தமிழ்மொழி, இலக்கியப் பணிக்கு அப்பால் பெரும் திருப்பத்தைச் சாதனையைத் தமிழரிடையே ஐரோப்பியக் கிறித்தவர் ஆற்றினமையைச் சுட்டிக் காட்டவேண்டும்.

வேத சமஸ்கிருதமே, தமிழுக்குத் தாய்மொழி என்று பெரும்பாலான தமிழர் கொண்டிருந்த மனப்பான்மை யையும், நாகரிகம், பண்பாடு வேத ஆரியரைச் சார்ந்தே தமக்குக் கிடைத்தன என்ற தமிழர் நம்பிக்கையையும், இவற்றால் அவரிடம் ஏற்பட்டுக் கிட்டத்தட்ட நிலை பெற்றிருந்த தாழ்வுணர்ச்சியையும் அடியோடு தகர்த்த பெருமை டாக்டர் கால்டுவெல், எட்கர் தர்ஸ்டன், ஜான் மார்சல் ஆகியவர்தம் படைப்புகளுக்கு உண்டு. கால்டுவெலின் மொழியாய்வு, தமிழின் தனித்தன்மையை எடுத்துக் காட்டியது. தர்ஸ்டனின் தென்னிந்தியக் குல ஆய்வு, தமிழர், திராவிடர் தனிப் பண்பாட்டினர் என்று எடுத்துரைத்தது, ஜான் மார்சலின் சிந்து வெளி அகழ்வாய்வு, தமிழ்த் திராவிடர்க்குப் பண்டைய நாகரிகத்தில் இருந்த பங்கை எடுத்து மொழிந்தது. இவற்றில் தமிழர், தாழ்வுணர்வு நீங்கி, வாழ்வுணர்வு பெற வழியேற்பட்டது என்பதில் கிஞ்சித்தும் ஐயமில்லை. தமிழ்மொழி வரலாற்றிலும், இன தமிழ் வரலாற்றிலும் தமிழ் நாட்டு