பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

வரலாற்றிலும் மேற்கண்ட மூவரின் ஆய்வு ஒரு பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது.

தமிழ் வரலாற்றில், தமிழர் இன வரலாற்றில் தமிழ்நாட்டு வரலாற்றில், ஐரோப்பியக் கிறித்தவராகிய

கால்டுவெல்
தர்ஸ்டன்
மார்சல்

மூவருமே மகத்தான சாதனை புரிந்த மகத்தாானவர்கள்!

கால்டுவெல் ஒப்பிலக்கணம் வெளிவருகிறவரை இந்திய மொழிகள் அனைத்தும் சமற்கிருத வழி பிறந்தவை என்ற கருத்தே மேலோங்கி இருந்தது.தமிழறிஞரே தமிழ் மொழி வடமொழிச் சார்பால்தான் வாழ்கிறது என்று நம்பினர். இலக்கணக் கொத்தை எழுதிய சுவாமிநாத தேசிகர் இக்கருத்தை வெளிப்படையாகவே எழுதியுள்ளார். இந்நிலையில், தமிழ் மற்ற சமஸ்கிருதத்தினின்று எப்படி வேறுபட்டு நிற்கிறது, ஏனைய திராவிட மொழிகளிலிருந்து தமிழ் எவ்வாறு தனித்து உயர்ந்து நிற்கிறது என்பதை நடுநிலையோடு தக்க சான்றுகள் காட்டி முதல் முதல் நிறுவிய பெருமை அறிஞர் கால்டுவெலையே சேரும். மொழி அளவில் உறக்கம் நீங்கி, விழிப்பைப் பெற அவரே மூலகாரணர். கால்டுவெலின் மொழியாராய்ச்சி, மொழித் துறையில் மட்டுமன்றி, தமிழர்தம் அரசியல், சமுதாய வரலாற்றில், பிற்காலத்தில் பெருமாற்றம் உருவாக ஒரு பெருங்காரணமா இருந்தது. பின்னே நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்ட திராவிட இயக்கங்களுக்கு உறுதுணை உரம், வீரிய விதை கால்டுவெலின் ஒப்பிலக்கணமே.

ஆதி ஐரோப்பியர் குறிப்புகளில், இந்தியர் போதிய பண்பாடு நாகரிகம் வாய்க்கப் பெற்றிராத மக்கள் என்றே பலரால் குறிக்கப்பட்டனர். குறிப்பாகப் போர்ச்சுக்கீசியர் இந்தியரைப்