பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59

பெரிதாகக் கருதவில்லை. இந்தக் கருத்தை முதலாவதாக, முற்று முழுவதுமாக மாற்றியது. அருள் திரு. ஈராசு அடிகளார் தம் சிந்துவெளி மொழியாய்வாகும். ஜான் மார்சலின், சிந்துவெளிக் கண்டுபிடிப்பு, இந்திய வரலாற்றில் ஒரு பெரும் திருப்புமுனை, ஈராசு அடிகளார்தம் ஆய்வு பிறிதொரு திருப்புமுனையாகும். சிந்துவெளி எழுத்துகள், தமிழோடு தொடர்புடையன என்பதைப் பல்லாண்டு ஆராய்ச்சி வழி, ஈராசு அடிகள் தம் பெரும் ஆய்வு நூல்வழி காட்டினர். ஈராசு அடிகளாருக்குப் பின் சிந்துவெளி மொழியாய்வுகள் பல நிகழ்ந்தன. நிகழ்ந்து, கொண்டிருக்கின்றன. எனினும், சோவியத், பின்னிசு, அமெரிக்க அறிஞர்கள. பல வேறு ஆய்விற்குப் பின்னும் சிந்துவெளி மொழியை பழந்திராவிடத்தோடு (Proto Dravidian) தொடர்புறுத்துகின்றனர். அணமையில் கீழ் வரிசையில் கண்டறியப்பட்ட பட எழுத்துகளும் சிந்துவெளி மக்களுக்கும் தமிழ் மொழிக்கும் இடையே இருந்த இணைப்பை உறுதி செய்கிறது.

அரசியல், சமயம், வணிகம் என்பன ஐரோப்பியக் கிறித்தவ வரவிற்குக் காரணங்கள் எனினும், சமயநெறி பரப்ப வந்த கிறித்தவச் சான்றோர்களால், தமிழ் மொழி பெற்றவை, தமிழ் இன வரலாறு பெற்றவை,தமிழ் நாட்டு வரலாறு பெற்றவை, தமிழர் கட்சிக்காகப் பெற்றவை எண்ணி அடங்கா; எண்ண அடங்கா. இந்தியா என்றால் சமஸ்கிருதந்தான் என்ற நிலைமை ஓரளவு மாற்றி, இந்தியா என்றால் அதன்மூல மொழி தமிழ், இந்திய மண்ணிற்கே உரிய தொன்மை மொழி தமிழ், இந்திய மண்ணின் தொல்பழம் மாந்தர் திராவிடர் என்று, இந்த மண்ணிலும், வெளிநாட்டு மண்ணிலும் ஓரளவு நிலைநாட்டியவர் ஐரோப்பியக் கிறித்தவர் சமயச் சான்றோரே ஆவர்.

ஐரோப்பியரைப் பின்பற்றி இந்தியக் கிறித்தவர், தமிழுக்கும். தமிழருக்கும் ஆற்றிய தொண்டு குறிப்பிடத்தக்கது விரிவாக ஆராயும் அளவிற்குப் பெரிதானது, தனி நூலாக வளரும் அளவிற்கு அது விரிந்தது; பரந்தது.