பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67

என ஆண்டகை பேசிய திறத்தைக் குத்பு நாயகம் குறிப் பிடுகிறது.

ஆலிப் புலவர் இயற்றிய மிஃராஜ் மாலை முதல் இஸ்லாமியக் காப்பியம் என்பர். இது சரியன்று. ஆயிரம் மசலாவே முதல் காப்பியமாக உள்ளது நபிகள் நாயகத்தின் விண்ணேற்றத்தை மிஃறாஜ் மாலை விவரிக்கிறது. நாட்டு வளத்தை ஆலிப் புலவர் பாடுத் திறம் அருமை வாய்ந்தது.

மாங்கனியின் செழுந்தேன் தன்மடைச்சாடி
வயல்கரும்பில் வந்து பாய
பூங்கரும்பின் கணுக்கள்தொறும் புதுத்தரளம்
தனைஈன்று புளகித் தேகி
தேங்கதலியுடன் இகலிற் செவ்விமுகம் புதைத்து
நிற்கும் செந்நெல் சீடர்
பாங்கருடன் குருபாதம் பணிவது போல்
தலைசாய்த்துப் பணியும் தானே!

நெல் தலை சாய்ப்பதை திருத்தக்க தேவர்,

சொல்வரும் சூற்பசும் பாம்பின் தோற்றம் போல்
மெல்லவே கருவிருந் தீன்று மேலலார்
செல்வமே போல்தலை நிறுவித் தேர்ந்த நூல்
கல்விசேர் மாந்தரின இறைஞ்சிக் காய்த்தவே!

என்பார்! நாயக வெண்பா எழுதிய அப்துல் மஜீத் அவர்கள்,

நல்லோர் பெரியோரை நாடி எதிர் கண்டால்
எல்லையில் பேரன்புபூண்டு ஏற்றசலாம் சொல்லி
தலைசாய்த்து மெய்க்கண் தழுவுதல் போல் செந்தெல் குலைசாய்த்த செய்க்கண் குளிர்ந்து

என்பார். ஆலிப் புலவரோ செந்நெல் சாய்ந்தது'குருபாதம் பணியும் சீடன் போல்' இருந்தது என்கிறார். பெருங்கதை