பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69


கனகவிராயர் இயற்றிய கனகாபிஷேக மாலை ஒரு வீரகாவியம்! பெருமானார் நாயகமலர்களின் அருமைத் திருப்பெயரர் 'கர்பலா' களம் கண்ட வீர ஹாசைன் அவர்களின் தீர வரலாற்றைப் பேசுவது இக்காவியம்.

புயவலி கல்வி மேன்மை புகழ்மிகு புலமை செல்வம்
இயல்மறைப் பொருளோர் வுண்டாம் எழில்பெறு
சுவனமெல்லாம்
கயவரினுய ரெசீது கணப்படை மடியத் தாக்கும்
வயவரி அலி உசைனின் வாள்வலி கூறுவோர்க்கே!

அண்ணல் ஹ-சைனின் வாள்வலியைக் கூறுவோர்க்கு எல்லாம் கிடைக்கும் என்கிறார்.

சேகனாப் புலவரின் மாணவரான ஐதுறூசு நயினார் என்பார் முகியித்தீன் ஆண்டகையைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு நவமணிமாலை எனும் காவியத்தை இயற்றியுள்ளார். இவ்வாறாக ஐந்து நூற்றாண்டுக் காலத்தில் அரிய காப்பியங்கள் பலவற்றை இஸ்லாமியப் புலவர்கள் பாடியளித்துள்ளார்கள்.

பண்டைய தமிழ் இலக்கியங்கள் இயற்றப்பட்ட காலம் குறித்து கருத்து மாறுபாடுகள் நிலவுகின்றன. ஆனால் இஸ்லாமியப் புலவர்கள் தாம் பாடிய காப்பியங்கள் எப்போது எங்கு பாடப்பட்டன என்றுரைத்திருப்பதால் கால, மாறுபாட்டுக்கு வழியில்லை. வண்ணக் களஞ்சியப் புலவர்,

திருநபி கிசறத் ஆயிரத் திருநூற்று
இருபத்து முன்றின் முஹ்ரத்
திங்களில் பதினா லாம்தேதி யதனில்
சென்றிடும் அட்சய வருடம்
வருடுபைங் கூனிமாத்தையியற் பனிரண்
டாம் தின மாகிய சோம