பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

படிகிடு கிடெனநாக முடிநெறு நெறெனவாரி
படுதிரை அளற தாகவே
வட வரை அசையவான முகடுடை படவறாத
மழைமுல் சிதறி ஓடவே
அடையவர் கெடிகள்கோடி இடுபடு படலதூளி
அலரியின் உடலில் மூழ்கவே
நடமிடு கடினவாசி மிசைவரு சமரசூர
நரர் புலி அலியை ஓதுவாம்.

எனப்பாடுகிறார். அலியார் மனிதர்களில் புலி போன்றவர்

மரில் சூரர்; துடிப்பு மிகுந்த குதிரை மீது அவர் வரும்போது பூமி கிடுகிடென நடுங்கும்; அவரை எதிர்த்தோர் இடியேறுண்ட நாகப் போல நெறுநெறெனச் சாய்வர் கடல் சேறாக மாறும்; இமயம் அசையும்; வானம் உடைபடும்; மழை முகில்கள் சிதறியோடும்; பகைவரின் நகரங்கள் இடிபட்டுத் தூளான தூசிகள் சூரியனின் உடலிற்சென்று படியும் அத்தகைய வீரமும் வலிமையும் மிக்கவர் அலியார்! அவர் துல்துல் என்னும் குதிரை மீது அமர்ந்து செலவார் ‘துல்ஃபிகார்’ என்னும் இரு முனைகளுள்ள வாளை ஏந்தி அவர் களம் புகுந்தால் எதிரிகள் நடுங்குவர். அகழ்போரில் ஆயிரம் வீரர்களுக்கு நிகரானவன் எனக் கருதப்பட்ட அமர் என்பவனை எதிர்க்க எவரும் முன்வராத போது அலியார் மட்டும் துல்ஃபிகார் (அலியைத் தவிர வீரரும் இல்லை;துல்ஃபிகாரைத் தவிர வாளுமில்லை எனப் பாராட்டினார் அலியாரைப் பாடியுள்ள இசுலாமியப் புலவர்கள் அனைவரும் அவர் நடமிடும் குதிரை மீது வாளேந்தி வருவதையே சிறப்புறப் பாடியுள்ளனர். திருமணி மாலையில் சேகனாப் புலவர்,

திசைபல அதிர்தர மலைநிலை பெயர்தர
செறிஅலை சுவறிடவே
விசைதரும் அனிலமும் எரிகதிர் தழல்புவி
விரைஇடி அவை அலற