பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73

வசையுறும் அடையவர் பதிகுலை குலைவுற
வருநெறி துரகதம்மேல்
இசைதர நடமிடும் அலிபுலி அவர் துணை
இருபதம் அது கதியே!

எனக் குறிப்பிடுவார்.

அலியார் பாராட்டின் பின், அவருடைய புதல்வர்களும் நபிகள் நாயகத்தின் திருப் பெயர்களுமான ஹசன் , ஹாசைன் இருவரும் வாழ்த்தப் பெறுவர். இவர்களையடுத்து பெருமானார் வாழ்ந்த காலத்தில் அவருடைய கருத்துக்களை ஏன், எதற்கு என்று கேளாமலேயே முற்றிலுமாக ஏற்றுக் கொண்ட ‘அஷ்ரத்துல் முபஸ்ரா’க்கள் வாழ்த்தப்படுவர். இவர்களையடுத்து முறையே இமாம்கள் நால்வர் (அபூபக்கர், ஹனிபா, மாலிக், ஹன்பல்) முகிய்யதீன் ஆண்டகை, நூல. எழுத உதவியோர் வாழ்த்தப் பெறுவர். கடவுள் வாழ்த்தின் இறுதியில் அவையடக்கம் இடம்பெறுகிறது. உமறுப் புலவர்,

படித்த லத்தெழு கடல்குல கிரிநிலை பதற
எடுத்து வீசிய சண்டமர் ருதத்தினுக்கு எதிரே
மிடித்து நொந்தசிற்றெறும்புஒரு மூச்சு விட்டதுபோல்
வடித்த செந்தமிழ்ப் புலவர்முன்யான் சொலும்மாறே
இடிஇடித்திடும் ஆரவாரத் தினுக்கு எதிர்ஓர்
நொடிநொடிப்பது போலும்ஒத் திருந்த தென் நூலே

என அவையடக்கம் கூறுகிறார். வலவர் நாயகமோ திரு மணிமாலையில்)

எண்டிசை கதிரின் முன்னர் இல்லிசைச் சுடரே போன்றும்
வண்டிசை மரையின் முன்னர் மலிர்தரும் தொட்டி போன்றும்
மண்டிசை யாழின் முன்னர் வன்பறை போன்றும் வல்லோர்
கண்டிசை நூல்முன் யானும் கருத்தொடும் இசைத்த லன்றே

என்பார்.