பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

77

சரியான குருவில்லா வணக்கம் உளதெல்லாம்
காவலில்லாக் கோழிமுட்டை இட்டதுபோல் உவமை!

சிறந்த மெய்ஞ்ஞானியருள் குணங்குடி மஸ்தான் சிறப்பிடம் பெற்றவர். சமயக் கருத்துக்களை எளிமையாக எடுத்துரைப்பதில் வல்லவர். ஓரிடத்தில் சிறப்புப் பெறும் பொருள் பிறிதோரிடத்தில் அச்சிறப்பினைப் பெறுவதில்லை. நான் சிறப்புற்று இருப்பேனோ அல்லது சிறப்பின்றித் தாழ்வேனோ என்பதைக் கூறவரும் சாகிபு,

கொலுமன் னரசர்கைக் கோலாவனோ பாவி
குருடர்கைக் கோலாவனோ

என்று குறிப்பிடுகிறார். உலக பாசமாகிய குருடன் கைக்கோலாய் இராமல் அரசன் கைக்கோலாக இருக்க வேண்டு மென்ற அடியவரின் ஆர்வம் இங்குப் புலனாகிறது. இதே கருத்தை விளக்க,

ஆலா விருஷமென மேலாவனோ உதிர்
அதன் சருகு போலாவனோ !

என்று கேட்பதும் பொருள் பொதிந்த வினாவாகிறது. ஒன்றோடு நெருக்கமாய் இருந்தும் அதன் இயல்பு உணரார்க்குப் பூஞ்சோலை ஓணானையும் தாமரைக் குளத்துத் தவளையையும் உவமையாக்குவார். ஓணான் காலம் முழுதும் பூஞ்சோலையிலேயே வாழ்ந்தாலும் பூவின் மணத்தை உணர்ந்து நுகர்வதில்லை. அதே போன்றுதான் பொற்றாமரைக் குளத்திலேயே பொழுதெல்லாம் அலைந்து திரிந்தாலும் தவளை தாமரையின் தேனைச் சுவைத்தறிவதில்லை. உயிர் இறைவனுடனேயே சேர்ந்திருந்தும் அதன் தன்மையை உணர்ந்து துயக் காதிருக்கிறதே என்னும் ஏக்கத்தால்,

பூஞ்சோலை வாழும் ஒணான் எனவும் வீணில் நான்
போகாமல் அருள்புரி யவும்