பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

85

மேலினில் வியர்ப்புக் காட்டி
விழியினில் எரியைக் காட்டி
தாதுவின் தலையைக் காட்டி
தரைவிடும் துகளைக் காட்டி
வாலினில் விசையைக் காட்டி
வயப்பரி நடந்த தம்மா!

எனப் பாடுவார்.

செய்குத் தம்பிப் பாவலர் அவர்கள் புலமைத் திறத்தோடு 'சதாவதானம்' செய்யும் ஆற்றலையும் பெற்றிருந்தார். அவதான நிகழ்ச்தியின்போது 'விராடனையேபெண் ணெனலாமே என்பதை ஈற்றடியாகக் கொண்டு ஒரு வெண்பாப் புனையுறுமாறு கூறினார்கள். அவர் உடனே,

உண்ணும் பொழுதும் உறங்கும் பொழுதுமொன்றை
எண்ணும் பொழுதும் எரிமுன்னாய்-மண்ணில்
வராடவனையே தெய்வம்மன் னெனும் சொற்ற
விராடனையே பெண்ணென லாமே.

எனப் பாடினார்கள். ஒருநாள் இல்லத்தில் அமர்ந்து எழுதிக் கொண்டிருந்தார். வந்த ஒரு நண்பர் அவ்வழியே சென்ற யானையையும் அவர் பேனாவையும் இணைத்துப் பாடும்படி கேட்டார். அவரும் சிலேடையாக,

அங்கை உடமையால் ஆகம் கருமையினால்
வெங்கண் மிகவரையை மேவுதலால் அங்கனிவாய்

தேனாணும் சொல்லுடையான் செய்கு தம்பிப்
பாவலன்கை

பேனாவும் யானையெனப் பேசு

எனப் பாடினாராம். இவர் பல சாற்றுக் கவிகளும் எழுதியுள்ளார். சீட்டுக் கவிகளும் எழுதியுள்ளார் , தாம் புதுமனை புகுந்தபோது தம் இல்லத்திற்கு அம்மி, குழவி வாங்கியனுப்பத் தம் நண்பர் சிவதாணுப் பிள்ளைக்கு எழுதுகிறார்: