பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

ஆயுமகத் தாரகத்துள் அனுதினமும்
அகலாமல் அன்போ டச்சம்
தோயுமகத் தாய்எந்தன் நூயகுணச்
சிவதாணுத் தோன்றால் யான் இன்று
ஏயும் அகத்து என்றென்றும் இருந்துபணி
இருந்துசெய இருங்கல் லாலோர்
தாயும்மகவும் தருவாய் தகுவிலையே
தருவலிசை தழைக்குந் தானே!

நபிகள் நாயகத்தின்மீது இவர்கள் பாடியுள்ள நாயக மான்மிய மஞ்சர் உணர்ந்துணர்ந்து படிக்கத் தக்கதாம்! அதில் ஒரு பாடல்:

கல்லால் எறிந்திருகால் காயமுறக் கண்ட கொடும்
பொல்லாப் புலையருக்கும் புத்திவரக் கையேந்தி
அல்லாத் திருச்சமூகத் தானதுஆ கேட்டு வந்த
நல்லார் உமைப்போலும் நானிலத்தில் உண்டேயோ!
நாதநபி நாயகமே நானிலத்தில் உண்டேயோ?

புதுக் கவிதைகள்

அப்துல் ரகுமான், மு. மேத்தா, இன்குலாப், நாஞ்சில் ஆரிது போன்றோர் புதுக்கவிதையுலகில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

இன்குலாப்

உறைந்து கிடந்த மக்கள் சக்தியோ
கோடி கோடி மின்னல் கொடிகளாய்
அண்டம் குலுங்க ஆகாயம் நடுங்க
எழுந்து நின்றது: எழுந்த சக்தியால்
சீனம் மட்டுமா சிவந்தது; இல்லை
பூமியின் இருண்ட கரைகள் எல்லாம்
பொங்கிப் புரட்சியில் சிவப்பாகின்றன.