பக்கம்:சமயமும் சமூகமும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை சமயம் உலகில் பன்னெடுங்காலமாய் வாழ்கின் றது. சமூகமும் அப்படியே. இரண்டும் ஒன்றை ஒன்று பற்றியே வாழ்கின்றன. எனினும், இரண் டையும் வேறுபடுத்தி ஒன்றை ஒன்று பற்ருமலும் வாழலாம் எனப் பேசுகின்றவரும் உள்ளனர். ஆயி லும், ஆழ்ந்து நோக்கின், சமூகவாழ்வின் அடிப் படையாகவே சமயம் வி ள ங் கு கிற து என்பது புலனுகும். இந்த உண்மையை விளக்க எழுந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். இந்நூலில் ஒன்பது கட்டுரைகள் இடம் பெறு கின்றன. இவை அனைத்தும் ஒருசேர எழுதப்பட் டவை அல்ல. சிற்சில இதழ்களுக்கு அவ்வப்போது எழுதியனவும், இரண்டோர் இடங்களில் பேசியன வுமே ஈண்டுத் தொகுக்கப்பெற்றுள்ளன. இவற்றுள் இரண்டொன்று கடந்த போர்க்காலக் கட்டுரைகள் என்னலாம். எனவே, அவற்றுள் போர் பற்றிய குறிப்புக்களும் இடம் பெறுகின்றன. இவை பல் வேறு காலங்களில் பல்வேறு இடங்களில் பேசியும் எழுதியும் வெளிவந்த கட்டுரைகள் ஆதலின், இவற் றுள் இரண்டொரு கருத்துக்களும், பெரியார்தம் பாடல்களும் திரும்பத்திரும்ப இடம் பெற்றிருக்கக் கூடும். எனினும், அவ்வக்கட்டுரையிலும் அவை தொடர்ந்து பொருள் காட்டப் பயன்படுகின்றன என்பதைப் பயில்வோர் அறிவர். சமயம் அன்று