பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்ல வேண்டும். பார்க்கப் போனால், பவனத்தின் மகிமையைப் பற்றி இத்துணை விரிவாகவும் ஆணித்தரமாக வும் வாழ்க்கையனுபவத்தையொட்டி வருணித்த வேறு எந்தவொரு நூலையும் தமிழ் இலக்கியத்தில் காண்பதற் கில்லை என்றே சொல்லலாம். இதன் காரணமாகவே இந்த நூல் தனித்ததொரு கவனத்தையும் ஸ்தானத்தையும் பெற்று தவிடுகின்ற து. - - - - இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில், பணத்தைப் பற்றிக் கார்ல் மார்க்ஸ் குறிப்பிட்டிருந்த கருத்துக் களையும், அவற்றை வலியுறுத்த அவர் ஷேக்ஸ்பியரிட மிருந்தும் கதேயிடமிருந்தும் கவிதை வரிகளை மேற்கோள் காட்டியிருந்தது பற்றியும் பார்த்தோம், பணத்தின் வலிமையைக் குறித்து கார்ல் மார்க்ஸ் காட்டியுள்ள இலக்கிய மேற்கோள்களில் சொல்லப்பட்டுள்ள எந்த (வொரு விஷயத்தையும், பணவிடு தூது சொல்லாது விட்டு விட வில்லை; மாறாக, அவற்றிலே காணப்படாத வேறு பல "உண்மைகளை வாழ்க்கை பனுபவத்தையொட்டி அழகு படச் சித்திரிக்கின்றது. எனவேதான் 'பணவிடு தூது என்ற இந்த நூல். கார்ல் மார்க்ஸின் கையில் கிட்டியிருந் தால், கார்ல் மார்க்சுக்குத் தமிழ் மொழியும் தெரிந்திருந் தால், அவர் ஷேக்ஸ்பியரிலிருந்தும், கதேயிலிருந்தும் சான்றுகள் காட்டித் தமது கருத்துக்களைப் புலப்படுத்துவ தற்குப் பதிலாக, பணவிடு தூதிலிருந்து பக்கம் பக்கமாக மேற்கோள் காட்டியிருப்பார் என்று நான் துணிந்து . கூறினேன். இத்தனை பெருமைக்கும் தகுதிக்கும் உரித்தான பண விடு தூது' தமிழில் தோன்றிய அருமையான சிற்றிலக் கியங்களில் ஒன்றாகும்; இந்நூலிலே காணப்படும் கவிதை நயம் மிகவும் உயர்தரமாக இல்லாவிட்டாலும், திக்கித் திண்றத சொல்லாட்சியும் எளிமையும் நிரம்பப் பெற்ற தாகும்.