பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11) நேர்ந்தது என்றும், பொற்கொல்லனது நடிப்பால், அதாவது நாடகத் தமிழால் தான் கோவலன் 'கள்வனானான் என்றும்,

  • கொன்று அச்சிலம்பினைக் கொணர்க' என்று பாண்டியன்

நெடுஞ்செழியன் கூறிய வாசகத்தால், அதாவது இயல் தமிழால் தான் கோவலன் கொலையுண்டான் என்றும், இதனால் கதையின் பெரு நிகழ்ச்சிகளுக்கெல்லாம் காரணமாக அமைந் திருட்டது முத்தமிழே என்றும், எனவே சிலப்பதிகாரம். ஒரு முத்தமிழ்க் - காப்பியம் என்றும் அவர் கற்பித்திருந்தார், புலவர து புத்திக் கூர்மையையும் சாதுரியத்தையும் மெச்சி, நாம் அவருக்குப் பூப்போட்டுக் கும்பிடத்தான் வேண்டும்! ஆனால் சிலப்பதிகாரத்துக்கு இப்படித்தானா பெருமை தேட 'வேண்டும்? மனமொத்த காதலர்களின் மத்தியிலே சந்தே கத்தை விதைத்து, பிரிவுக்கு வழிகோலவும், நிரபராதியான ஒருவனைக் கள்வனாக்கவும், கோடாத. செங்கோல் படைத்த ஒரு மன்னனைக் கொலைகாரனாக்கவும்தானா முத்தமிழின் வலிமையும் பெருமையும் பயன்பட வேண்டும்? - கற்புக் கடம் பூண்ட ஒரு தெய்வத்தைக் கைம்பெண்ணாக்கவும், பிழையுணர்ந்து திருந்திய ஒருவனைச் செய்யாத குற்றத்தின் பேரால் பிணமாக்கவும்தான் தமிழ்மொழி : பயன் பட்டதென்றால், தீத்திறத்தார். பக்கமே சேர்ந்த தீ நமது செந்தமிழையும் அல்லவா சுட்டெரித்திருக்க வேண்டும்! இல்லையா? தமிழ்மொழி அன்றும் இன்றும் தமிழ் மக்களை எவ்வாறு வாழ வைத்த து, வாழ வைத்து வருகின்றது. என்பதனைக் கூற முயலாமல், தமிழ் மொழி எவ்வாறு வாழ்வுக்கே வைரியாக இருந்து சாகடித்தது என்று விளக்க வி யாக்கியானங்கள் காண்பதன் மூலமா, சிலப்பதி காரத்துக்கும் செந்தமிழுக்கும் பெருமை தேடிவிட முடியும்? ஆனால் இல்லாத பெருமைகளையெல்லாம் ஏற்றிச் சொல்ல வேண்டும் என்று. எண்ணுகின்றபோது, இத்தகைய விசித்திர மான, விபரீதமான விமர்சனங்களும் வியாக்கியானங்களும் தோன் றத்தான். செய்யும்,