பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113 இவ்வாறு இல்லாத பெருமைகளைத் தேடியலைந்து, அதற் காகவே குதர்க்கமான, குயுக்தியான காரணங்களைக் கண்டறியப் பாடுபடுகின்றவர்களுக்கும், தமிழில் அந்தக் காலந்தொட்டே எல்லாம் இருந்தன என்று பழம் பெருமை பேசுபவர்களுக்கும் நாம் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் அறிவுரையைத்தான் சுட்டிக்காட்ட முடியும். 1948-ம் ஆண்டில் நாகர்கோவிலில் நடந்த தமிழ் எழுத் தாளர் மாநாட்டின்போது கவிமணி தமது வரவேற்புரையில் -9 வ யATறு டி னா : . , , நான். எழுத்தாளர்களுக்கு ஒன்று சொல்ல விரும் புகிறேன். தமிழில் அது . இருந்தது, இது இருந்தது என்று பழம் பெருமை பேசிக் 3க்கண்டிராமல் எது தேவையோ அத்துறையில் இறங்கி அவர்கள் உழைக்க வேண்டும். முத்தமிழ், முத்தமிழ் என்று முழக்கம் செய்கிறார்கள். இசைத் தமிழில் எத்தனை புத்தகங்கள் இருக்கின்றன? பண்டை நூww்களைப் படித்து விட்டு, நாம் “பெரு நாரை', 'பெருங்குருகு' என்று திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தால் இசை ஞானம் உண்டாகிவிடுமா? அந்த நாரைகளும் குருகுகளும் மறைந்து போய்விட்டன. இனி நம்முடைய வலைக்குள் அகப்படப் போவதில்லை! ஓர் ஏழை உண்ணச் சோறும் உடுக்கத் துணி யும் இல்லாமல் தவிக்கிறான். அவனிடத்தில் அவனுடைய பாட்டனும் கொட்பாட்டனும் பெரிய கப்பலோடி வியாபாரிகளாயிருந்தார்கள் என்று பழம்புராணம் படிப் பதினால் என்ன பயன்?... சில தமிழர்களிடம் இதைப் பற்றிப் பேசினால் தமிழிலிருந்த இசைத்தமிழ், நாடகத்தமிழ் நூல்கள் கொஞ்சமா? அவையெல்லாம் கபாடபுரத்தைக் கடல் கொண்டதோடு போய்விட்டன' என்று சொல்லி, நம் வாயை அடைத்து விடுகிறார்கள், போய் விட்டன, போய் விட்டன என்று சொல்லி, தரையிலிருந்து அலையை எண்ணிக் கொண்டிருந்தால், அவை வந்து கரையேறுமா? புது நால்கள் ஆக்குவதுதானே செய்யத் தக்க முயற்சி. தமிழில் நாடகங்கள் அதிகமாக இல்லை ...??