பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 - ஆரம்ப காலத்திலே இத்தகைய நாட்டியங்களில் கதையம்சம்: கலக்கப் பெறவில்லை. பிற்காலத்தில் சாந்திக் கூத்து' என்னும் நாட்டிய வகையில் ' “நாட கம்” என்ற ஒரு ' 12ரிவு தோன் றியது. இந்த நாடகம் என்ற நாட்டியத்தில் தான் கதையும்சம் இடம் பெற்றது. நாடகம் என்ற சொல்லுக்குப் புதியதோர். அர்த்தபாவம் இந்தக் கால கட்டத்தில்தான் உண்டாயிற்று. இன்று நாம் கொள்கின்ற ஆர்த்தடாலத்தை நேட்டிய பொருள் அதற்குண்டாயிற்று. எனவே சாந்திக் கலத் திள் “ நாடகமே? இன்றைய நாடகங்களுக் கெல்லாம் பரிணமத் தோற்றுவாயாக அமைந்திருந்தது என்று தாம் சொல்லலாம். இவ்வாறே, கதை தழுவிய நாட்டிய நாடகங்கள் தமிழில் தோன்றத் தொடங்கின. இத்தகைய நாடகங்கமோ வார்ப்பதில் தமிழ் நாட்டுத் திருக் கோயில்கள் டெரிதும் உதவி வந்துள்ளன. 'இராஜ ராஜேஸ்வர நாடகம்” என் ) (ஒரு நாடகம் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வந்ததாகக் கல்வெட்டுச் சான்று காணப்படுகின்றது; அதே போன்று கமலாலய பட்டர் என்பவர் “பூம்புலியூர் நாடகம்' என்ற ஒரு நாடகத்தை எழுதி, மன்னலடமிருந்து இறையிலியாக நிலம் பெற்றதாக வேறொரு கல்வெட்டுக் கூறுகின்றது. எனவே இத்தகைய நாடகங்கள் எல்லாம் 10-ம் நூற்றாண்டுக் காலத்திலேயே தோன்றி விட்டன. என்று கூறலாம். ஆனால் ' இதிலும் பரிதாபம் என்னவென்றால், இத்தகைய நாடகங்களின் பெயர்கள்தான் நமக்குக் கிட்டியுள்ளனவே தவிர, நாடகங்கள் கிட்டவில்லை. இங்கு ஒரு விஷயத்தைக் குறிப் பிட்டாக வேண்டும். இந்த நாடகங்களெல்லாம் 'தோன்று வதற்கு முன்பே, 7-ம் நூற்றாண்டிலேயே, காஞ்சியைத் தலை நகராகக் கொண்டு ஆண்டு வந்த மகேந்திர வர்ம் பல்லவன்" படமொழி நாடக பாணியைப் பின்பற்றி, ஒரு இலாஸ்ய நாடகத்தை எழுதினான், அதன் பெயர், 'மத்த விலாசப் பிரகசனம்' என்பதாகும். அதிலும் பரிதாபம் என்ன - வென்றால், அந்த நாடகத்தை அவன் தமிழ் மொழியில் எழுதாமல் வடமொழியிலேயே எழுதி விட்டான்! எனவே