பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121 அச்சு வாகனம் ஏ றின. அவற்றில் சில நாடகங்கள் நமக்குப் பெயரளவிலேதான் தெரிகின் றன. 19-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் அச்சான நூல்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று அரசாங்கச் சட்டம் இருக்கவில்லை, அக் காலத்தில் மர்டாக் என்பவர் அச்சில் வெளியான நூல் களைப்பற்றி ஒரு விவரணப்பட்டியல் தயாரித்தார். அந்தப் பட்டியலின் மூலம்தான் பத்தொன்பதாம் நூற்றாண்டில் (வெளிவந்த நூல்களின் விவரங்களை நாம் அறிந்து கொள்கிறோம். அந்த நூற்றாண்டில் அச்சேறிய நாடகங்கள் பலவும் இன்று கிடைப்பதில்லை. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில், இவற்றில் சில மறுபதிப்புக்களாக வெளிவந்துள்ளன', என்றாலும் அந்த நாடகங்கள் சாதாரண வாசகர்களுக்குக் கிட்டுவது அருமையிலும் , அருமையாகி விட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வெளிவந்த சுந்தரம்பிள்ளையின் மனோன்மணீயம், பரிதிமாற் கலைஞனின் கலாவதி, ரூபாவதி, சம்பந்த முதலியாரின் லீலாவதி சுலோசனை முதலிய நாட,கங்களே தமிழ் வாசகர்களுக்குப் பெரிதும் தெரிந்தவை. ஆனால் இவை தவிர நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்கள் அந்த நூற்றாண் டில் வெளிவந்துள்ளன. அந்த நாடகங்களைப் பற்றி நாம் இங்கு விரிவாக ஆராய்வதற்கில்லை. எனினும், அவற்றின் கதைகளைக் குறித்துச் சில விவரங்களை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். நாடகம் என்பது பெரும்பாலான மக்களின் முன்னிலையில் நடிக்கப்பெற வேண்டிய ஒன்று. ஆதலால், அவற்றில் பலவும் பாமர ரஞ்சகமான பாடல்களும், வசனங்களும் நிறைந்தே விளங்கின. மேலும் மக்களிடையே வழங்கி வந்த நாடோடிக் கதைகள், கர்ணபரம்பரைக் கதைகள், புராண இதிகாசக் கதைகள் முதலியனவும் நாடகக்கதை களரய்ன, பாரதக் கதையிலிருந்தும் ஏராளமான " தாட கங்கள் உருவாயின ; ராமாயணத்திலிருந்து தா கல்யாணம்