பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 தனித்ததோர் அந்தஸ்தும் மதிப்பும் உண்டு. அதன் கார ணமாகவே அந்நூல் நமது கவனத்தைக் கவர்கிறது. மேலும் தவபலப்படுத்துவ மாஞ்சாமி முதலாவதாக, அந்நூல், அக்காலத்தில் வெளிவந்த பெரும்பான்மையான நாடகங்களைப் போல், புராண இதி காச, 'கர்ண பரம்பரை, நாடோடிக் கதைகள் எதனையும் "தனது கதைப் பொருளாகக் கொள்ளவில்லை; அடுத்ததாக அந்தக் காலத்திலே கண்ணைக் கவரும் ஆடை மேடையலங்காரத்தை முக்கியத்துவப்படுத்தி, வெளிவந்த பொழுதுபோக்குக் கதையாகவும் அது அமையவில்லை; மாஜக, டம்பாச்சாரி விலாசம் அதன் ஆசிரியர் வாழ்ந்த காலத்தில் அவர்" கண்முன்னால் தோன்றிய, ' அன்றைய ' செல்வந்த வர்க்கத்தாரிடையே நிலவிய சீர்கேட்டையும், அவர்களைச் சார்ந்து பிழைத்துவந்த 'ஆமாஞ்சாமி”களின் அலங்கோலத்தையும் அம்பலப்படுத்துவதற்காக எழுதப் பட்ட நூல். மேலும் கதாசிரியர்கள் எல்லோரும் பொதுவா கக் குறிப்பிடுகிற மாதிரி, 'எல்லாம் கற்பனையே; யாரையும் எதனையும் குறிப்பிடுவதல்ல” என்று கூறித் தப்பித்துக் கொள்ளவேண்டும் என்றும் ஆசிரியர் விரும்பவில்லை. கதாநாயகனான டம்பாச்சாரி ஒரு கற்பனைப் பிறவியல்ல, டாம்பீகமாக வாழ்வதன் காரணமாகத்தான் “டம்பாச்சாரி? என்று கூறப்பட்டபோதிலும், சென்ற நூற்றாண்டில் சென்னையின் ஒரு பகுதியான சிந்தாதிரிப்பேட்டையில் டம்பாச்சாரியெனப் பெயர் பெற்ற ஒரு பிரபலமான செல்வந்தரே வாழ்ந்திருக்கிறார். இன்றும் சிந்தாதிரிப் பேட்டையிலுள்ள ஒரு வீட்டை, 1<1-ம்பாச்சாரியார் வீடு” என்று அந்தப் பகுதியிலுள்ள - மக்கள் சுட்டிக் காட்டு கிறார்கள். அந்தச் செல்வந்தரின் சீர்கெட்ட வாழ்க்கை ! யைப் பின்னணியாகக் கொண்டு தான் டம்பாச்சாரி விலாசம் எழுதப்பட்டுள்ளது. செல்வந்தர் வர்க்கத்தை, அதிலும் தம் காலத்தில் உண்மையிலேயே வாழ்ந்திருந்த ஒருவரின் ' வரலாற்றைக் கூச்ச நாச்சமின்றி" அம்பலப்படுத்துகின்ற துணிச்சலூம் நோக்கமும் ஆசிரியருக்கிருந்திருப்பதே நமது