பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125 பெரும் பாராட்டுக்குரியது. உண்மையில் சென்ற நூற் றாண்டில் அவர் இத்தகைய காரியத்தைச் செய்வதெனில், அதளை எத்தனை எதிர்ப்புக்களிடையே செய்திருக்கமுடியும் என்பதையும் நம்மால் ஊகிக்க முடியும். எனவே தான் நூலில் இடம் பெற்றுள்ள கதாம்சம், அதன் சமுதாயச் சூழ் நிலை, அவற்றின் பின்னணியில் நிலவும் ஆசிரியரின் ச.த. யச் சீர்திருத்த நோக்கம், அந்த நோக்கத்தை நிறைவேற்று வதற்காக, அவர் மேற்கொண்ட புதுமையும் துணிச்சலும் மிகுந்த முயற்சி முதலியனவற்றின் கார ண மாகவே இந் நூல் பெருமை பெறுகிறது. இத்தகையதொரு பெருமையை இதற்குமுன் எந்தவொரு நாடக நூலும் பெற்றிருக்க வில்லை . .

  • ஜாசீர்

டம்பாச்சாரி விலாசத்தை எழுதியவர் சென்னையைச் சேர்ந்த சைதாப்பேட்டை வாசியான (தியாகராஜ முதலி யார் என்பவரின் புதல்வர்) காசி விஸ்வநாத முதலியார் ஆவார். (“பேரோங்கு சைதைத் தியாகராஜர்க்கு நற் பேறாய் நினையளிக்க...”--சாற்றுக்கவி), சென்ற நூற் றாண்டில் வாழ்ந்து வந்த இந்த நூலாசிரியர் ஆங்கிலேய அரசாட்சிக்குட்பட்ட நியாயஸ்தலம் ஒன்றில் அரசாங்க மொழி பெயர்ப்பாளராகப் பணியாற்றியிருக்கிறார், (நியாயத்தலத்து அதி திராவிடமொடு ஆந்திரம் இங்கி வீஷில் மொழி பெயர்த்து...-சாற்றுக்கவி). இந்நூலா சிரியர் தமது தாய்மொழியைத் தவிர, தெலுங்கு, உருது, 'ஆங்கிலம் முதலிய மொழிகளிலும் நன்கு பயிற்சி பெற் றிருந்தார் என்பதை நாம் நூல் வாயிலாகவும் கண்டு கொள்ள முடிகிறது. - ஆங்கிலம் கற்று அரசாங்கப் பதவியி - லிருந்த இவர் சைவ சமயத்தைச் சார்ந்த குடிப்பிறப் பினர் என்றாலும், இவருக்கு பிரம்ம ஞானக் கொள் கையில் ஈடுபாடும் பிடிப்பும் இருந்து வந்திருக்கின்றன.