பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உணர்ச்சி, அதாவது ஆண் பெண் என்ற இருவேறு முரண் பட்ட சக்திகளுக்கிடையே ஏற்படும் இயற்கையின் ஈர்ப்புதான் - மானிட.குலத்தின் வளர்ச்சிக்கே ஜீவாதாரமானது என்பது யாவரும் அறிந்த உண்மை . இதனால் தான் காதல் க.சர்ச்சி மேம்படும்போது முன் சொன்ன மெய்ப்பொருள் உறவு நிலையும் ஏற்பட்டுவிடுகின்றது. இந்த உண்மையை அறிந்து தான் சம்சார பந்தத்தை உதறிவிட்டு, இறைவனடி சேர வேண்டுமென்று விரும்பிய பக்தர்கள்கூட, சரியை, கிரியை, யோகம், ஞானம் என்று சொல்லப்படும். மார்க்கங்களில் சம்சார பந்தத்துக்கே ஆதாரமான கரதல் உணர்ச்சியோடு, நாயக நாயகி பாவத்தோடு ஆண்டவனை. அணுகுவதே நான் மார்க்கம்' என்றும், அதுவே மார்க்கங்களிலெல்லாம் தலையாயது என்றும் கருதினார்கள். அந்த அடிப்படையில் அவர்கள் பல்வேறு அற்புதமான கவிதைகளையும் ஆக்கித் தந்தார்கள்; அந்தக் கவிதைகளில் ஆண்டவனின் அருளுக் காகக் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கிக் கரைந்துருகி னார்கள். ஆனால் ஆற்றாமை என்பது காதலிலும் பக்தியிலும் மட்டும்தானா பிறக்கிறது? வேறு பல உனளர்ச்சி நிலைகளிலும் ஆற்றாமை ஏற்படக் கூடுமல்லவா? நண்பினர் பிரிவு, வறுமையின் துயரம், ஆற்றமுடியாத சோகம், நிராதர வுணர்ச்சி போன்ற பல்வேறு நிலைகளில் ஆற்றாமையும் அவல நிலையும் ஏற்படும்போது, சுவரோடாயினும் சொல்லியழு!?? என்ற கூற்றுக் கிணங்க, அந்த ஆற்றாமையை எதனிடமாவது, யாரிடமாவது சொல்லித் தீர்த்து, மனப்பாரத்தைக் குறைத்துக் கொள்ளவும் மாந்தர்கள் முயன்று வந்திருக் கிறார்கள்.. மேலே கூறிய இத்தகைய உணர்ச்சி நிலைகள், அனுபவங்கள், அனுபவத்தின் வெளியீடுகள் முதலிய வற்றாலேயே, * தூது' எனப்படும் ஒரு துறை இலக்கி MLF உலகில் தோன்றுவதற்கும், தோன் றிக் காலதேச வர்த்தமானத்துக்கு ஏற்றவாறு பரிணமித்து வளர்வதற்குமான வாய்ப்புக்கள் ஏற்பட்டன என்று சொல்லலாம்.