பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண் எருது ஆனா? 1252 ஷனூறு பக்கங்கள் கொண்ட டம்பாச்சாரி விலாசம் விருத்தம், வஞ்சிப்பா, ஆனந்தக் ... களிப்பு, கண்ணி , நொண்டிச் சிந்து முதலிய பல பாவினங்களும், ராக தாளமும் சந்த வின்னியர் சமும், நிறைந்த பல்வேறு கீர்த்தss? களும் நிரம்பப் பெற்று, இடையிடையே வாழ்க்கையை யொட்டிய வழக்கு மொழியில் அமைந்த வசனங்களும் நிறைந்து விளங்கு கின்றது. நூலில் பாத்திரங்கள் அறிமுகமாகின்ற போதும், சில சம்பவங்களைத் தெரிவிக்கின்ற போதும் விருத்தப் பாக்கள் ஆசிரியர் கூற்றாக அமைந்துள்ளன. அந்தந்த விருத்தம் பாக்களில் காணப்படும் விஷயத்தை, அடுத்தடுத்து வசன மாகவும் ஆசிரியர் கூறிவிடுகிறார். நூலில் காணப்படும் வசனங்கள் அனைத்திலும் நகைச்சுவையும், நையாண்டி யும், எதார்த்தமான வாழ்க்கை விவரணங்களும் நிறைந்து விளங்குகின்றன. இந்த நூலுக்குப் பல பண்டிதர்களும் தமிழறிஞர்களும் சாற்றுக்கவிகள் வழங்கியுள்ளனர். அவர் களில் திருத்தணிகை விசாகப் பெருமாள் ஐயரும், விநோத - ரசமஞ்சரியை எழுதிய அஷ்டாவதானம் வீராசாமி செட்டி யாரும் குறிப்பிடத் தக்கவர்கள். இருபதாம் நூற்றாண்டுப் புலவர்கள் சிலரும் இந்நூலின் முக்கியத்துவம் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்கள். உதாரணமாக, இந்த நூற்றாண் டின் தலைசிறந்த தமிழாராய்ச்சியாளரான வையாபுரிப் பிள்ளை டம்பாச்சாரி, விலாசத்தைத் “தற்கால நாடகங்களுக்கு வழிகாட்டிகளாக இருந்த நாடகங்களில் ஒன்றெனக் குறிப்பிடுகின்றார். பேராசிரியர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் சென்ற நூற்றாண்டின் நாடகங்களைப் பற்றித் தாம் எழுதி யுள்ள ஒரு கட்டுரையில், சீர்திருத்த நாடகங்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, “19-ம் நூற்றாண்டில் காசி விசுவநாத முதலியார் இந்த வகையில் தலை சிறந்தவர் எனலாம்” என்று