பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 கூறுகிறார். ஆனால் அந்த 'பெஸ்ட் கம்பெனி' அவரைக் கேலி செய்து விரட்டிவிடுகிறது. இந்த நண்பர்களைத் தவிர, கணக்கப்பிள்ளைகள்;ாக எமப்புரட்டன், கட்டைப் புரட்டன் என்பவர்களும், ரைட்டராக அண்டப்புரட்டன் என்ப வரும், டம்பாச்சாரியிடம் வேலை பார்த்து, அகப்பட்டதைச் சுருட்டிக்கொண்டேயிருக்கிறார்கள். டம்பாச்சாரியிடம் சட்டுவா ஜி (மெய்காப்பாளன்) யாகவும், சோக்ரா {எடுபிடி வேலை பார்க்கும் பொடியன்} வாகவும் பணியாற்று பவர்கள் மட்டும் தமது 'எஜமானரிடம் விசுவாசமாக இருக்கிறார்கள்.. அவர் செய்யும் தவறுகளையும் உணர்ந்து வருத்துகிறார்கள், இத்தகைய சூழ் நிலையில் அதே ஊரில் மதன சுந்தரி என்ற தாசியும் வசித்து வருகிறாள். அவள் தன் தாய்க் கிழவியின் போதனையின் மூலம் 'உறு மீன்” ஒன்றைக் கொத்திப் பிடிக்கக் காத்திருக்கிறாள். இந்த உறுமீன் டம்பாச்சாரியாக விளங்குகிறான். டம்பாச்சாரியை மதன சுந்தரியிடம் அழைத்து வந்து சேர்த்து வைக்கும் மாமாத் தொழிலைக் கும்பகோண ஐயர் என்ற ஒரு பிராமணன் நடத்தி முடிக்கிறான். டம்பாச்சாரி மதன் 'சுந்தரியிடம், கூட்டி மகிழ்ந்து வாழ்கிறான். அங்கு அவனுக்கு வசிய மருந்து கொடுத்து, அவனிடமுள்ள செல்வத்தையெல்லாம் பறிக்கத் தாயும் மகளும் திட்டமிடுகிறார்கள். மதனசுந்தரிக்குப் பெரியதொரு மாளிகை கட்டிக் கொடுக்கிறான் டம்பாச். சாரி. அத்துடன் தனது வீட்டிலுள்ள நகை நட்டுக்களை யெல்லாம் அவளுக்கு வாரியிறைக்கிறான். இவ்வாறு அவன் பல வகைகளிலும் செல்வத்தைப், பாழடி த்ததால், கடன்படுகிறான். இவனுக்குக் கடன் கொடுக்க, 'புல்லையச் செட்டி, ஷேக்மீரான் லெப்பை என்ற பேராசை பிடித்த லேவாதேவிக்காரர்கள் முன்வருகிறார்கள், இவ்வாறு மேலும் மேலும் டம்பாச்சாரிக்குக் கடன் அதிகரிக்கிறது. அவனது ! குடும்பத்தில் வறுமை நிலவுகிறது. உத்தம பத்தினியான குணபூஷணி அத்தனையையும் சகித்துக் கொண்டிருக்கிறாள்.