பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 133 ) இத்தகைய நிலையில் டம்பனும் , மதனசுந்தரியும் திருவொற்றியூருக்குச் சென்று கூத்தடிக்கிறார்கள், ஆனால் இத்தனைக்கும் மத்தியில் ' அவனது செல்வம் வறண்டு . போகிறது. எனினும் அவன் தன து *ாம்பீகத்தையும் ஆடம்பரத்தையும் மட்டும் விட்டுவிடவில்லை. இதனால் மனைவிக்கும் அவனுக்கும் நேர்ந்த வாக்குவாதத்தால், அவன் மனைவியையும் குழந்தைகளையும் வீட்டை விட்டு வெளி யேற்றுகிறான். குண பூவு ணி வேறு வழியின்றி, தன் தாய்வீடு செல்கிறாள், . பின்னர் கடன் கொடுத்தவர்களெல்லாம் 'கடனைக் கேட்டு நெருக்குகிறார்கள். பணத்தை வசூல் பண்ண வழி தெரியாத அவர்கள் எமகாதகன் என்ற பெயர் கொண்ட வழக்கறிஞனை நாடுகிறார்கள், இதன் காரணமாக டம்ப னுக்குக் கோர்ட்டிலிருந்து வாரண்டு உத்தரவு வருகிறது, இந்த நிலைமைக்கு அவன் ஆளானதும், மதனசுந்தரியும் அவளது தாயும் டம்பனை வீட்டை விட்டு வெளியேற்று கிறார்கள். டம்பனுக்கு நண்பர்களாக இருந்தவர்களெல்லாம் கம்பி - நீட்டிக் கண்மறைந்து போய்விடுகிறார்கள், கடை சியில் காவலில் வைக்கப்பட்ட : டம்பனுக்குப் பிணை யளித்து அவனை வெளியில் கொண்டுவர எவருமே இல்லை, இதற்கிடையில் சாட்சி சொல்வதற்கும் ஜாமீன் கொடுப் பதற்கென்றுமே திரிந்தலைந்து. பணம் சேர்க்கின்ற பேர் விழிகளில் ஒருவன் 'கைகொடுத்து உதவுகிறான். இறுதியில் டம்பாச்சாரி 'இன்ஸால்வெண்ட்' கொடுத்துத் தப்பிக்கிறான், இத்தனைக்கும் பிறகும் அவன் மனம் மாறவில்லை. அவன் மீண்டும் மதனசுந்தரியை நாடுகிறான். ஆனால் தாய்க் கிழவிக்கும் அவனுக்கும் தர்க்கம் விளைந்து, அவள் அவனை வெளியில் அடித்துத் துரத்துகிறாள். அதற்குத் தன்வசமுள்ள குடிகாரர்களை அவள் பயன்படுத்துகிறாள். பின்னர் இவர் சுளுக்கிடையிலுள்ள தகராறு பெரியதனக்காரர்களின் விசா ரணைக்குப் போகிறது. பெரியதனக்காரர்கள் உடம்பனுக்கு விரோதமாகத் தீர்ப்புக் கூறிவிடுகிறார்கள், இதன் பின்னர் இ தர்க்கம், அதற்கு பின்னர் விசா