பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 கவிராயர், வைத்தியர், நகைத் தொழிலாளி, சிரவைத் தொழிலாளி, சமையற்காரத் தவசிப்பிள்ளை, டாடா ரங்கள், மதனசுந்தரியின் தோழிகள் முதலிய பல்வேறு பாத்திரங்களும் - வந்து செல்கின்றனர், இவர்களெல்லாம் கதையில் நகைச்சுவையை வழங்கி, அதனை ருசிக்கச் செய் திருக்கிறார்கள். இந்த நெட்டிய நாடகத்தின் சிற்சில ரசமான பாடல்கள், சம்பாஷணைகள், சம்பவங்கள் முதலியவற்றை நாம் இனிப் பார்க்கலாம், உட்கார்ச்சாரியின் தாயார்

  • தை தொடங்கியதும் டம்பாச்சாரியின் வீட்டு

வாசலைக் காக்கும் கட்டியக்காரனே டம்பாச்சாரியின் வருகைக்குக் கட்டியம் கூறி, மேடைமீது வந்து ஜனக்கூட் டத்தை எச்சரிக்கிறான். பாரில் விலை மாதரை பரிபாலனம் செய் பராக்கிரமம் மிகுந்த தீரன்! பாரவிரயங்களோடு பாரிகளும் அவர்களும் பரத்தையர்க் கீயும் வீரன்! பாரிதனை வீட்டைவிட் டோட்டி யவன் முகம் பாராதிருக்கும் சூரன்? கோரிய கடன்களை வாங்கிய வர்கட்கே கொடா திருக்கும் குரூரன்! ஆட்ட பாட்டங்களோடும் ஆனதன் நேசரொடும் - ஆடம் பரங்கள் செய்ய தாட்டீக மாகவே சபையிலே வருகிறான்! சகலரும் எச்சரிக்கை !