பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 கெளரவிக்கிறான். அவரும் வந்த காரியத்தைப் பேசத் தொடங்குகிறார். அவனுடன் தங்கியிருந்த நண்பர்களை யெல்லாம் குறை கூறி, அவர்களை விரட்டியடிக்கவேண்டும் எனக் கூறுகிறார். அதற்கு அந்த நண்பர்களே அவருக்குப் பதில் கொடுக்க முனைகிறார்கள். இந்தக் காட்சி முழுவதும் ஆசிரியர் ஒரு விசித்திரமான வசன நடையைக் கையாள் இறார். அதாவது புத்தி சொல்ல வந்த லோபனும் சரி, அவரை எதிர்த்துப் பேசும் டம்பனும் சரி, அவனது நண்பர் களும் சரி, 4.பல்வேறு பழமொழிகளின் மூலமே 'தாம் சொல்லவேண்டிய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இந்த ஒரு காட்சியில் மட்டுமே நூற்றுக்கணக்கான பழமொழி ஆள் வந்து செல்கின்றாள். அதன் மூலம் இந்தக் ' காட்சி நகைச்சுவை அம்சம் பெற்று விடுகிறது. அதிலும் பரம் லோபனின் பேச்சில் வருகின்ற பழமொழிகளுக்குக் கணக்கு வழக்கே இல்லை! உதாரணமாக, அவருக்கும் இன்லால்வெண்ட் டமாஸ்டருக்கும் நடக்கும் சம்வாதத்தை நாம் பார்க்கலாம்; இன்ஸrrல்; என்ன பெரிய ஐயா! மிகவும் கோபிக்கிறீர்? நம்முடைய காரியம் எல்லாம் நன்றாய்த் தெரியும் என்கிறீர். உமக்கென்ன தெரியும்? அறிவேன் அறிவேன் ' ஆலிலை. புளியிலைபோல்) இருக்கும் . என்பது போல்... உம்முடைய சங்கதி என்றும் , பெண்ணாயிரம் கோடிக்குத் தெரியும். என் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய், உன் வீட்டுக்கு வந்தால் என்ன கொடுக்கிறாய் என்கிறவர். ஒரு மிளகுக்கு ஆற்றைக் கட்டி இறைத்த செட்டியார். கடுஞ்செட்டும் கண்ணைக் கெடுக்கும். கடுகு போகிற இடத்தில் தடி கொண்டு திரிவார்; பூசணிக்காய் போகிற விடம் தெரியாது............ உலோபன்; அப்பா நீர் வந்தீரா? அவன் கெட்டான் குடியன், எனக்கிரண்டு திராம் வாரென்று வந்தீர், அதிலே குறைச்சலில்லை. ஆட்டடா' பூஜாரி என்று, பேச்சுக்கள் .