பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 அழைத்து, அன்னத்தைத் தம் நண்பனிடம் தூது விடுக்கும் செய்தியை நாம் புறநானூற்றில் காண்கிறோம். இவ்வாறே பண்டைக் காலம் தொட்டே தூது நிகழ்ச்சி தமிழ் இலக்கியத்தில் இடம் பெற்று வந்திருக் கின்றது. சங்க காலத்துக்குப் பின்னும் தூது நிகழ்ச்சி யைத் துறையாகக் கொண்டிருந்த தனிப் பாடல்கள் ஏராளம்; அவற்றிலே புலவர்களின் சமத்காரத்தையும் கற்பனையையும் , கண்டு வியக்கக்கூடிய ', காதல் தாதுப் பாக்களே அதிகம். எனினும் தமிழிலுள்ள தனிப் பாடல்களிலேயே தனித்ததொரு ஸ்தானத்தைப் பெறக் கூடிய அந்தப் பேர் தெரியாத சத்திமுத்தப் புலவர்து *நாரை விடு தூதை' நம்மால் மறந்துவிட முடியுமா? நாராய்! நாராய்! செங்கால் நாராய்!, பழம்படு பனையின் கிழக்கு பிளந்தள்ன புவனக் கூர்வாய்ச் செங்கால் நாராய்! என்று தாரையை அழைத்து, அதனிடம் தமது அவல நிலையைக் கூறித் தூது விடுக்கும் அந்தப் பாட்டுத் தமிழ் இலக்கியத்துக்கே' கிடைத்த அரியதோர் ஆனிமுத்து என்றே சொல்லவேண்டும். அந்தப் பாடலிலுள்ள கற்பனை யழகும், உவமை நயமும், எதார்த்த வரதமும் என்றென்றும் வியந்து பாராட்டிப் பெருமைப்படத் தக்கனவாகும். சங்க இலக்கியம் தொட்டே., தூதுப் பாடல்கள் தமிழ் இலக்கி பத்தில் இடம் பெற்று வந்துள்ள போதிலும், பிற்காலத்தில் அந்தத் துறை நவநவமான வளர்ச்சியையும் புதுமைகளையும் தன்னுட் கொண்டு உருவாகி வந்திருப்பதையும் நாம் காணலாம். தமிழ்நாட்டில் சமயத்துறையில் பக்தி இயக்கம் மேலோங்கி நின்ற காலத்தில் கவிதா சக்தி படைத்த பக்த சிரோமணிகள் இந்தத் தூதுத் துறையைத் தமது கருத்துக் களுக்கொரு வாகனமாக்கிக் கொண்டார்கள். உதாரண