பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157 என்று புலம்புகிறாள் அந்தத் தாய். இறுதியில் அவள் வேறு வழியின்றித் தன் தாய்வீடு செல்கிறாள். என்னைப் பாழுங் கிணற்றில் தள்ளிவிட்டீர்களே, பாவிகளே!” என்று பெற் றோர்களிடம் அழுது கண்ணீர் வடிக்கிறாள். அவளது தாயும் மகளது நிலைகண்டு வருந்துகிறாள். குணபூஷணியின் நிலை இவ்வாறிருக்க, டம்பனுக்குக் கடன் கொடுத்த புல்லையச்செட்டி, லெப்பை முதலியோர் கடனைக் கேட்க வருகிறார்கள். கடனைத் திருப்பிக் கொடுக்க வழியற்ற டம்பன்' அவர்களை அடித்து விரட்டவும் துணிகிறான். அவர்கள் வேறு வழியின் றி எமகாதகன் என்ற லாயர் துபாசியிடம் செல்கிறார்கள். டம்பன் கட்கைப் பணத்தை வாங்கி ஏப்பமிட்டால், - எமகாதகன் 'பீஸ்' என்ற பேராலேயே பணத்தைக் கறந்து விடுபவனாயிருக் கிறான். அவன் டம்பன் மீது மோசடி வழக்குப் போடப் பொய்ச் சாட்சிகளையெல்லாம் தயாரித்து டம்பனுக்கும் பிடிவாரண்டு கொண்டு வருகிறான். வாரண்டுச் சேவகன் டம்பனைக் கைது செய்ய, மதனசுந்தரியின் வீட்டுக்கு வருகிறான். டம்பன் ஒளிந்து கொள்ள நினைக்கிறான். ஆனால் தாய்க்கிழவியும் மதன சுந்தரியும் அவனைத் தந்திரமாய் வெளியில் தள்ளிக் கதவைச் சாத்திவிடுகிறார்கள். எனவே டம்பன் கைதாகி, கோர்ட்டுக் கிடங்கில் அடைபடு கிறான். அன்னை ஜாமீனில் வெளியில் கொண்டுவர நாதியில்லை. அவனது விசுவாச ஊழியனை சட்டுவாஜி ஒருவன் தான் அவனைக் காண வருகிறான். நண்பர்கள் எல்லாம் போன இடம் தெரியவில்லை. கடைசியில் போலி ஜமீன்தார்கள் தான் கிடைக்கிறார்கள். அவர்கள் செய்த சாகசத்தால் டம்பன் வெளியில் வருகிறான். ஆனால் லாயர் துபாசி பொய்ச் சாட்சிகளைக் கொண்டு வழக்கை நடத்திய தால், வழக்குத் தோற்றுப் போகிறது. செட்டியும் லெப் பையும் ஏமாறுகிறார்கள். லாயர் தங்களை ஏமாற்றிவிட்ட தாகப்" புலம்புகிறார்கள். கடைசியில் ' டம்பன் இன்ஸால் வெண்ட் மனுக் கொடுக்கிறான். தன் - சொத்துக்களெல்