பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 கிறார். அவரது சங்கீத ஞானம், சாகித்தியத் திறமை... எல் லாம் ஒருபுறமிருந்தாலும் அவர் ஒரு சிறந்த கவிஞரல்ல. அற்புதமான. கற்iரைகளையோ, சிறந்த சொல்லாட்சி களையோ நாம் காண இயலவில்லை. ஆனால் இதே காலத் தில் எழுந்த வேறு சில நாடகங்களில் காணப்படும் சாகித் தியங்கள் சிலவற்றில் நல்ல கவிதைகளையே நாம் இனம் காணமுடியும், அந்த அளவுக்கு ஆசிரியர' து. திறமை எ.ட வில்லை , இங்கு இன்னொரு விஷயமும் குறிப்பிட்டாக வேன்டும். ஆசிரியரின் கதாம்சம் கிட்டத்தட்ட - விறலி. விடும் தாதுக்களில் வரும் கதாம்சம் போன்றது தான். இவ ரது கதையிலே இவர் காலத்துச் சமுதாய உண்மைகளும், சூழ்நிலைகளும் இடம் பெற்றிருப்பதொன்றே புதுமை. எனவே ஆசிரியர் சுப்ரதீபக் கவிராயர் எழுதிய விறலிவிடு தூதை நன்றாகக் கற்று, அதனைப் பெரிதும் பயன்படுத்தி தியுள்ளார் என்றே தெரிகிறது. உதாரணமாக, தாய்க். கிழவி தன் மகளுக்குத் தாசித்தொழில் பற்றிப் போதிப்பது, டப்பனுக்கும் தாய்க்கிழவிக்கும் . சண்டை மூள்வது.. அவர்கள் பெரியதனக்காரர்களின் மத்தியஸ்தத்துக்குப் டோவது, தாய்க்கிழவி டம்பனுக்கு வசிய மருந்தக் கூட்டுவது முதலிய பகுதிகளெல்லாம் விறலிவிடு தாதிலிருந்து கடன் வாங்கியவை என்றே சொல்லலாம். அதிலும் தாய்க்கிழவியின் போதனை, மருந்து கூட்டுவது முதலியவற்றைக் கூறும்போது, ஆசிரியர் விறலிவிடு தாதில் காணப்படும் கருத்துக்களை அப்படியே கடன் வாங்கி எழுதியுள்ளார். அவற்றில் புதிய கருத்தோன்றும் இல்லை. சொல்லாட்சித் திறன் மிகுந்த விறலிவிடு தூதைப் படித்தவர்களுக்கு, இந்தக் காட்சிகள் உப்புச் சப்பற்றவையாகத்தான் தோன்றும். ஆனால் இது விஷயத்தில் சுப்ரதீபக் கவிராயரும், சரவணப் பெருமாட் கவிராயரும் தமது விறலிவிடு தூதுக்களில் அடிமுடி கண்டு விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். அவர்களை மிஞ்சிப்