பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 . கிலே இருந்தபோதிலும், அவற்றின் இலக்கியத்தரம் என்னவோ மிகவும் குறைவுதான்: கால வெள்ளத்தில் நீந்தி நிலைத்து நிற்கக்கூடிய அளவுக்கு அவற்றின் இலக்கியத் தரய் அமையவில்லை. எனவே சொற்கட்டு, கவிதை வளம், வசன வனம், நாடக உத்தி முதலிய அம்சங்களைக் கருத்திலே கொண்டு பார்த்தால், டம்பாச்சாரி விலாசத்தின் இலக்கியத் தரமும் அந்தஸ்தும் தாழ்வான வைதான். என்றபோதிலும் எல்லோரும் சென்று கொண் டிருந்த செக்கடி மாட்டுத் தட்டடத்திலேயே செல்லாது, தாம் வாழ்ந்த காலத்தில் தம் கண் முன்னால் நிகழ்ந்த மோசடிகளையும், புல்லுருவி வாழ்க்கையையும், பணக் கார வர்க்கத்தின் இழிதன்மைகளையும் அம்பலப்படுத்தி, அதன் மூலம் சமுதாயச் சீர்கேட்டின் ஒரு பகுதியைக் கீறிக்காட்டி, அந்தப் புண்ணை ஆற்றவேண்டும் என்ற லட்சிய தாகத்தோடு, யாருக்கும் எதற்கும் அஞ்சாத துணிவாற்றலோடும் துடிப்போடும் ஆசிரியர் டம்பாச் சாரி: விலாசத்தையும் எழுதியுள்ள செயலொன்றே அவ ருக்குப் பெருமை தருகிறது. சமூகச் சீர்திருத்த நாட சுங்களின் அவசியத்தை , வற்புறுத்தி, அத்தகைய பணி யில் முதற்பெரும் முன்னோடியாகத் திகழ்ந்த காரணத் தாலேயே டம்பாச்சாரி விலாசம் நமது கவனத்தைக் கவர்கிறது; அதன் காரணமாகவே அதன் ஆசிரியர் காசிவிஸ்வநாத முதலியார் நமது பாராட்டுக்கும். நினை வுக்கும் உரியவராகிறார்.