பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 வில்லை. நமது நினைவு மங்காத சமீப காலத்தில் நிகழ்ந்து போன பஞ்சங்களில் இந்திய மக்களின் மனத்தில் வடுப் பாய்ந்து விட்டதுபோல் பதிந்துபோனது வங்காளப் பஞ் சம்தான், சென்ற உலக யுத்த காலத்தில், 1943ம் ஆண்டில் நிலவிய இந்தப் பஞ்சம் மிகவும் பயங்கரமானது. கங்கை நதி பாயும் வங்க வளநாட்டில் தோன்றிய இந்தப் பஞ்சம் கள்ளச் சந்தைக்காரராலும், கொள்ளை லாபக் காரரா லும், அன்றைய ஆங்கில அரசாங்கத்தின் அலட் சியத்தாலும் சிருஷ்டிக்கப் பெற்ற பஞ்சமே யாகும். இந்தப் பஞ்சத்தால் வங்க நாடே சீரழிந்தது. அதன் காரணமாக, இந்திய நாட்டின் முதற்பெரும் நகரமான கல்கத்தாவின் நாகரிகம் மிக்க 'வீதிகளிலே நாதியற்றுச் செத்து விழுந்த பிணங்கள் நாறத் தொடங்கின. ஐம்பது 'லட்சம் மக்களைத் தின்று தீர்த்துப் பசியா: றியது இந்தக் கொடும் பஞ்சம். இந்திய சரித்திரத்தின் கரிசூழ்ந்த கால மான இந்தப் 'பஞ்சத்தில் மக்கள் ' பட்ட அவலத்தைப் பல்வேறு நூல்கள் எடுத்துக் கூறின; , வங்க நாட்டில் தோன்றிய பல்வேறு இலக்கியங்களும் அதனைப் பிரதிபலித் தன; கதைகள், கவிதைகள் முதலியன' ஏராளம். வங்க மொழியைத் தவிர,ஏனைய இந்திய மொழிகளிலும் ஆங்காங்கே இதனைப் பிரதிபலித்த இலக்கியங்கள் தோன்றின. இந்திய மொழியைத் தவிர, ஆங்கிலத்திலும் இதுபற்றிய இலக்கி உங்கள் சில வெளிவந்தன. அவற்றில் பானி பட்டாச் சார்யா என்பவர் எழுதிய 'பலப்பலி பசிகன்!? (So 'Many tHungars?) என்ற நாவல் - மிகவும் பிரசித்தமானது. மேலும், கிருஷண் சந்தர் 'அன்ன தாதா' என்ற பெயரில் உருதுவில் எழுதி, ஆங்கிலத்தில் நான் . சாக் முடியாது!' (I Cannot diet) என்ற தலைப்பில் மொழி - பெயர்க்கப்பட்டு வெளிவந்த நெடுங்கதையும் பிரபலமர் ன து. இந்தப் பஞ்சம் இந்திய எழுத்தாளர்களின் கல் னத்தை மட்டுமன்றி, அயல் நாட்டு எழுத்தாளர்களின்

  • கவனத்தையும் கவர்ந்தது. அதன் காரணமாக, யுத்த