பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டு தமிழ் நூல்கள் எனக்குக் கிட்டின. ஒன்று அழகிய சொக்கநாத' - (பிள்ளை என்பவர் எழுதிய காந்திமதி கலித்துறை அந்தாதி; மற்றொன்று வில்லியம் பிள்ளை என்பவர் எழுதிய பஞ்சலட்சணத் திருமுக விலாசம். இவற்றில் முதல் நூலான காந்திமதி அந்தாதியை அறிமுகப் படுத்துவதே இந்தக் கட்டுரை. (இரண்டாவது : நூலைப் பற்றிய கட்டுரையும் அதனை அடுத்து இடம் பெறுகிறது). , பஞ்சம், SIKாட்ரும். . தமிழ் இலக்கியத்தில் பஞ்சப் பாட்டுக்களுக்குக் " குறைவே இல்லை! அதாவது தமிழ்ப் புலவர்கள் , தமது -வறுமையை விளம்பரம் செய்து, புரவலர்களையும், வீரபுக் ..ளையும் நாடிச் சென்று, அவர்களிடம் குறையிரந்து பாடிய பாடல்களுக்கு அளவேயில்லை. இத்தகைய புலவர் பரம்பரையை நாம் புறநானூற்றுக்காலம் முதல் கொண்டே இனம் காண இயலும். அவ்வாறு உதவி நாடு வதும், உதவி கிடைத்தால் உதவியவர்களை இந்திரன், சந்திரன் என்று வானளாவப் புகழ்வதும், கிடைக்கா விட்டால், வஞ்சகர்பால் நடந்தலைந்த காலிற் புண் (ம், வாயில்தொறும் முட்டுண்ட தலையிற் புண்ணுமாகத் திரும்பி வருவதும் தமிழ் - இலக்கியத்தில் பரவலாகக் காணப்படும் செய்தியாகும். ஆனால் சமுதாயம் முழுவ தையும் உலுக்கிக் குலுக்கியெடுத்த உணவுப் பஞ்சங்கள் ஏற்பட்ட காலத்தில், அதனால் " சமுதாய வாழக்கை இவ்வாறு பாதிக்கப்பட்டது. என்பதை எடுத்துக் கூறுகின்ற புலவர் பெருமக்களை விளக்கு வைத்துத்தான் தேட வேண்டும்! அன்னியரின் ஆட்சிக் காலத்தில் தமிழ் நாட்டில் நிகழ்ந்த பஞ்சங்கள் குறித்து முன்னர் பார்த்தோம்