பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

478 அந்தப் பஞ்சம் புலவர்களையும் விட்டு வைத்திருக்காது; பஞ்சத்திலே சிக்கிக்கொள்ளாத அளவுக்குத் தமிழ்ப் புலவர்கள் பங்களாவாசிகளாகவும், பணம் படைத்தவராகவும் வாழ்த்து விடவில்லை. என்றாலும் அந்தப் புலவர்களில் ஒருசிலருக்கேனும் அந்தப் பஞ்சத்தைப் பற்றியும், அதிலே படாத பாடுபட்ட மக்களைப் பற்றியும் ஏதாவது பிரக் மஞயோ, உணர்வோ இருந்து, அதனைப் பிரதிபலிக்கக் படிமப் பாடல்களை எழுதியுள்ளார்களா என்று பார்த் தால், அத்தகைய LATTடல்கள் - கிட்டுவது மிகவும் அரிது தான், 'ஒர் தட்டிலே பொன்னும் ஓர் தட்டி.லே நெல்லும் ஒக்கவிற்கும் கார் தட்டிய பஞ்ச காலத்திலும்' என்று படிக் காசுப் புலவரைப்போல் போகிற போக்கில் பொதுப்படை 8.ாக ஓரிரு வரிகள் பாடிப்போனவர்கள் ஒரு சிலர் அகப்பட்ட லாம். ஆனால், ஐம்பது லட்சம் தமிழ் மக்களின் ஆவியைக் குடித்த தாது வருஷப் பஞ்சத்தை, அதனால் நேர்ந்த கொடியும் சமுதாயச் சீர்கேட்டை, அதில் மக்கள் பட்ட துன்பம் துயரங்களை எத்தனைத் தமிழ்ப் புலவர்கள் தமது கவிதைகளில் பிரதிபலித்தார்கள்? இந்தக் கேள்வியை நெஞ்சில் நிறுத்திக்கொண்டு தமிழ் இலக்கியத்தைத் துழா வினால் நமக்குக் கிட்டும் விவரங்கள் மிகவும் அற்ப சொற்பம் தான். என்றாலும் பெரும்பாலான தமிழ்ப் புலவர்கள் செய் 'யாத காரியத்தைப் புலமை அறிவே இல்லாத பாமர மக்கள் செய்திருந்தார் கள். இலக்கிய ஏடுகளிலும், தனிப் டா...ல் திரட்டுகளிலும், சில்லறைப் பிரபந்தங்களிலும் காணப்படாத விவரங்கள் வாய்மொழி வழக்காக வழங்கி வந்துள்ள பல்வேறு நாட்டுப் பாடல்களிலே இடம் பெற் றுள்ளன. மண்ணை நம்பி வாழ்ந்த மக்கள் தங்களது அனுபவத்திலே பிறந்த உணர்ச்சிகளுக்கு அருமையான உருவம் கொடுத்திருக்கிறார்கள். ஆம். அவர்கள் , வாய் பாடாவிட்டாலும், வயிறு பாட வைத்துவிட்டது. இவ் லாறு பஞ்சத்தின் கொடுமையால் அவதிப்பட்ட மக்கள்