பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

', 'H9 மத்தியிலே தோன்றிய பாடல்கள் பலப்பல, என்றாலும் "அத்தகைய நாட்டுப் பாடல்களெல்லாம் இன்னும் வேண்டிய மட்டும் தொகுக்கப் பெறவில்லை. மாசி மழை பேயாதோ? மழை வெள்ளம் சாயாதோ? - ஏத்து மீன் ஏறாதோ? எங்கள் பஞ்சம் தீராதோ? நித்தம் கவலைகளோ? நெடுநாளும் துன்பங்களோ? பாரக் கவலைகளோ? பல நாளும் தொல்லைகளோ? கன்னங் கறுத்த மழை - காலணிப் பெய்" மழை இன்னம் கறுக்க வேணும் எங்கள் பஞ்சம் தீர வேணும்? என்றெல்லாம் விவசாய மக்கள் தமது பஞ்சகாலத் துயர் களைப் பாடிவைத்திருக்கிறார்கள்... இwை , தவிர மழை. பெய்ய வேண்டுமென்பதற்காக மழைக்கஞ்சி எடுப்பது, கொடும்பாவி கட்டி இழுப்பது முதலிய சந்தர்ப்பங்களிலும் அவர்கள் . பாடும் பாட்டுக்களும் பஞ்சக் கொடுமையை நமக்கு : எடுத்துக்காட்டுகின்றன. இத்தகைய மக்களை தி. தவிர, மக்களோடு ஒன்றி நின்று, மக்களுடைய பாஷையில், மக்களுக்காகப் பாடல்கள் இயற்றிய அம்மானைக் கவிஞர் கள் சிலரும் பஞ்சத்தைப் பற்றிப் பாடியுள்ளார்கள். அல்லியரசாணி மால; நல்லதங்காள் கதை -முதலிய, அம் மானைப் பாடல் நூல்களில் பஞ்சத்தால் சமுதாயம் பாதிக் கப்பட்ட விவரங்கள் சிலவற்றை நாம் காணலாம்.